உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுள் காப்பீடு மீது ஜி.எஸ்.டி.,: வாபஸ் பெற மம்தா வலியுறுத்தல்

ஆயுள் காப்பீடு மீது ஜி.எஸ்.டி.,: வாபஸ் பெற மம்தா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜி,எஸ்.டி.யை திரும்ப பெற வேண்டும். வரி விதிப்பதால் சாமானிய மக்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது' என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார். இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதம்: ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜி,எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும். என்னை பொறுத்தவரை வரி விதிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.

போராட்டம்

வரி விதிப்பதால் சாமானிய மக்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார். முன்னதாக, ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

lana
ஆக 03, 2024 11:12

எந்த gst வரி விதிப்பு லும் மாநில அரசு சரி பாதி வரி விதிக்கிறது. அது தான் sgst. ஏன் உங்கள் பங்களிப்பை குறைத்தால் வேறு வழியில்லை என்று அவர்கள் குறைப்பார்கள். சும்மா பிலிம் காட்டும் வேலை பார்க்க வேண்டாம்


ராஜா71
ஆக 03, 2024 10:45

சைக்கிளில் இடியாப்பம் விற்பவருக்கும் இந்த அம்மா GST போடுவாங்க..... ஆளுமை சரியில்லை.. அவ்வளவு தான்


thamizhan
ஆக 03, 2024 00:06

I appreciate


nagendhiran
ஆக 02, 2024 20:34

என்ன ஒரு பித்தலாட்டம்? கிஸ்தி முன்பு காப்பிடுதிட்டத்திற்கு 15 % வரி இருந்தது? கிஸ்தி பிறகு அது 18% ஆனது? ஏரிய 3% குறைக்க சொன்னால் அது நியாயம்? ரத்து செய்ய சொல்வது கேவலமான அரசியல்?


தத்வமசி
ஆக 02, 2024 20:13

இப்படி வெளியில் வந்து நாடகமாடுவதை விடுத்து ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும் உங்களுக்கு ஒரு வீடோ அதிகாரம் உள்ளது. உங்களுக்கு என்று ஒரு நேரம் ஒதுக்கி இருப்பார்கள். அந்த நேரத்தில் பேச வேண்டியதை பேசினால் வேண்டியது கிடைக்கும். இண்டி கூட்டணி ஆளும் மாநில தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அனைவரும் சேர்ந்து சொல்லுங்கள். சொல்வதை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூறுங்கள். வெளியில் கூறுவதால் எந்த பலனும் கிடையாது. வெறும் அரசியல் ஆட்டம் மட்டுமே என்பது அனைவருக்கும் விளங்கும். அது போல டீசல், பெட்ரோலுக்கும் சேர்த்து சொல்லுங்கள். அதை மட்டும் மாநிலங்கள் பொது மக்களிடம் இருந்து வாரி குவிக்கும். ஆனால் ஆயுள் காப்பீட்டுக்கு வரி வேண்டாம் ? இது எந்த மாதிரியான நாடகம் ?


Minimole P C
ஆக 03, 2024 10:55

excellent.


Ramesh Sargam
ஆக 02, 2024 20:12

இந்த ஒரு விஷயத்தில் மம்தாவின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன்.


Minimole P C
ஆக 03, 2024 10:57

Innocent Ramesh


Swaminathan L
ஆக 02, 2024 19:27

நிதின் கட்கரியே எழுதிய பிறகு, எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த குரலாக ஒலிக்க தீதியும் ஒரு கடிதம் எழுதியாகி விட்டது. நிதியமைச்சர் இந்த விஷயத்தில் ஜிஎஸ்டியைக் குறைத்தோ அல்லது விலக்கு அளித்தாலோ, உடனே அது என்னால் தான் நிகழ்ந்தது என்று பாராட்டிக் கொள்ளலாமே


ஆரூர் ரங்
ஆக 02, 2024 19:17

வங்க திரிணமூல் நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தலைமை வகித்த நேரத்தில் இதே ஆயுள் காப்பீட்டுக்கு வரி விதிக்கப்பட்டது. அப்போ இந்தம்மா காரிய மவுனம்.


தாமரை மலர்கிறது
ஆக 02, 2024 19:00

நிதின் கட்காரி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.


A Viswanathan
ஆக 03, 2024 10:11

உண்மை தான்.வரி விலக்கு அளிக்க வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி