உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம்: காங்., சொல்கிறது

அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம்: காங்., சொல்கிறது

புதுடில்லி: ''அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். நாங்கள் ராமரை வணங்குகிறோம்'' என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்தார்.வரும் 22ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையியல் காங்கிரசில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்தது.இது குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, ''ராமரை நேசிப்பவர்கள் அழைப்பிதழ் கிடைத்த உடன் கண்டிப்பாக வருவார்கள்'' எனக் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்கட்சி துணை தலைவருமான பிரமோத் திவாரி கூறுகையில், ''அழைப்பிதழ் வழங்க இவர்கள் யார்? ஒட்டுமொத்த காங்கிரசும் அயோத்திக்கு அழைப்பின்றி செல்லும். அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். நாங்கள் ராமரை வணங்குகிறோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kannan
ஜன 16, 2024 09:55

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு தீர்வும் இல்லாமல் இருந்த அயோத்தி பிரச்சனை மோடி ஆட்சியில் தீர்வு ஏற்பட்டுள்ளது .மோடி அயோத்தியை வைத்து போன முறை வெற்றிபெற்றது காங்கிரீஸுக்கு தெரிந்ததே.இந்த முறை அயோத்தி கோயில் திறப்பு மோடிக்கு சாதகமாகவே முடியும் .மோடியின் அயோதிவேற்றி காங்கிரீஸுக்கு பின்னடைவே .இம்முறையும் ராமர் பிஜேபி அணியில் உள்ளார் காங்கிரேஸ்ஸர் இயேசு கிறிஸ்துவை வணங்கினாலாவது ஏதேனும் எங்கேயும் வெற்றிபெற முடியும்.


தமிழ்வேள்
ஜன 16, 2024 08:14

அந்த ஒற்றை குடும்பம் முழுவதையும் இத்தாலி க்கு மூட்டை கட்டி அனுப்பி விட்டு நீங்கள் உருப்படியாக வாழும் வழியை பாரூங்க..


பேசும் தமிழன்
ஜன 16, 2024 07:58

போறதே போறீங்க.... திருட்டு திராவிட மாடல் கட்சியின் உதவாத நிதி சொன்னது தவறு என்று கூறி விட்டு.... பிறகு போகலாம் !!!


Ramesh Sargam
ஜன 16, 2024 00:36

அயோத்தியால் காங்கிரஸ் கட்சியினரிடையே பிளவு.


Seshan Thirumaliruncholai
ஜன 15, 2024 21:57

ராமர் அயோத்தியில் மட்டும் இருக்கிறார் என்று கருதினால் இறைவன் எங்கும் இருக்கிறான் என்பது பொய்யாகிவிடும். முதலில் வீட்டில் உள்ள இறைவன் தெருவில் உள்ள இறைவன் ஊரில் உள்ள இறைவனை வணங்கவும். அயோத்தியில் உள்ள ராமனை தரிசனம் செய்யவேண்டும் என்று நினைத்தாலே அவனே வாய்ப்பை கொடுப்பான்.


தத்வமசி
ஜன 15, 2024 21:42

காங்கிரஸ் ஆண்ட அம்பது ஆண்டு காலத்தில் இந்துக்களுக்கு செய்த துரோகங்கள் ஒவ்வொன்றாக இப்போது பொது வெளியில் நாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இப்படியே இருப்பது தான் இந்தியாவிற்கு நல்லது. மோடிஜி ஆட்சிக்கு வந்த பிறகும் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது பொது வெளியில் நன்கு வந்து கொண்டிருக்கிறது. சைனாவையும், பாகிஸ்தானையும்,காலிஸ்தான் போராளிகளையும் பிடித்து தொங்கிக் கொண்டிருங்கள். சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி அவர்களை தேசத்தின் நீரோட்டத்தோடு சேராமல் வைத்திருப்பது உங்களின் காங்கிரஸ் கட்சி தான்.


Krishnamoorthy Nilakantan
ஜன 15, 2024 20:13

இவர்கள் இரட்டை வேடம் போடும் கில்லாடிகள் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை உருப்படாத சுய நல வாதிகள் இந்துக்கள் சப்போர்ட்டும் வேண்டும் ஆனால் அவர்கட்கு நல்லது எதுவும் செய்யவும் கூடாது மேலிடத்து உத்திரவுப்படி விளங்க மாட்டார்கள்


ராஜா
ஜன 15, 2024 19:21

வெறுப்பின் வீதியில் அன்பின் கடை வைத்தவர்களுக்கு அயோத்தியில் என்ன வேலை?


பேசும் தமிழன்
ஜன 15, 2024 18:15

அப்போ என்ன காரணத்துக்காக... உங்கள் இத்தாலி மேடம்... கோவிலுக்கு நாங்கள் வர மாட்டோம் என்று கூறுகிறார் ??? மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது....உங்களுக்கு யார் பிடிக்கும் என்று நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் !!!


ravi
ஜன 15, 2024 17:55

ராமர் மோதியின் மூலம் உங்கள் அனைவரையும் பணிய வைத்து விட்டார்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ