உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு காங்., வழி வகுக்கும்": சொல்கிறார் ராகுல்

"விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு காங்., வழி வகுக்கும்": சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் வழி வகுக்கும்' என காங்கிரஸ் எம்.பி ராகுல் உறுதி அளித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு எதிராக, 3 சட்டங்களை கொண்டு வர முயற்சி செய்தது. விவசாயிகள் மீது மத்திய அரசு தடியடி நடத்தியது. அவர்கள் போராட்டங்கள் நடத்திய இடத்தில் ஆணி அடித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி மற்றும் வேளாண் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி அகற்றப்படும்.

ரூ.1 லட்சம்

ஏழைக் குடும்பப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சமும், இளைஞர்களுக்கு முதல் வேலையாக தொழில் பயிற்சி மற்றும் ரூ.1 லட்சமும் வழங்க உள்ளோம்,. இதன் மூலம் விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறும். கடனில் உள்ள விவசாயிகளின் நிலைமை மாறும். காங்கிரஸ் அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Senthil
மே 18, 2024 21:23

விவசாயி கள் கொஞ்சம் நல்லா இருக்கிறது இவருக்கு பிடிக்க வில்லை போல இருக்கிறது , ஆட்சி க்கு வர என்ன என்ன பொய் , பித்தலாட்டம் பேச சொல்லுது இவர்களுக்கு


Ramesh Sargam
மே 18, 2024 21:14

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் கட்சியை விட பாஜக மிக மிக சரியான வழியை இப்பொழுதும் வகுத்துக்கொண்டிருக்கிறது


chandramohan
மே 18, 2024 20:28

When your house is fixed at tihar why disturb the farmers


Duruvesan
மே 18, 2024 19:54

அதை நீங்க உங்க ஆட்சில பண்ணி இருந்தா விவசாயி எதுக்கு மோடிக்கு ஓட்டு போட போறாரு? ஒரு கூந்தலும் பண்ணல, இப்போ பீலா, மூடிட்டு இரு பாஸ்


sankar
மே 18, 2024 19:34

யாரு நீ - மாநிலத்துக்கு மாநிலம் எல்லா கட்சியும் உன்ன ஓடவிடறாங்க - நீ சொல்றத நாங்க நம்பனும் - போவியா


குமரி குருவி
மே 18, 2024 18:38

முதலில் விவசாய நிலங்கள் வீட்டு மனையாகி வருவதை தடுக்க முடியுதா..பார்ப்போம் அப்புறம் விவசாயிகளுக்கு கிழிப்போம்


GMM
மே 18, 2024 18:12

நெசவாளர்கள் பின்னேற திமுக உதவி விவசாய முன்னேற்றத்திற்கு நீர் வளம் தேவை பிஜேபி தேசிய நெடுஞ்சாலை அமைத்து விட்டது இந்திய காங்கிரஸ் காலத்தில் படிப்படியாக பெரிய நதி நீர் இணைத்து இருக்கலாம் கங்கை காவேரி வரை இணைப்பு அல்லது தென்னிந்திய நதிகள் இணைப்பு ஒன்றும் செய்யவில்லை இருக்கும் நதிகள் மாசு விவசாயத்தில் நவீன தொழில் நுட்பம் அதிகம் நதி நீர் இணைப்பு, பசு வதை தடுப்பு போதும் உலகின் பசியை தீர்க்க முடியும் உலக ஒரு சந்தையாகி விட்டது பழம், உணவு பொருட்களை சேமிக்க தேவையான அளவு கிடங்குகள் நேரு குடும்பம் அரசியலை விட்டு விலகல் அல்லது காங்கிரஸ் திருந்தும் வரை தேர்தலில் படுதோல்வி


V RAMASWAMY
மே 18, 2024 18:00

க்கு முன் ஏன் வழி வகுக்கவில்லை? அதற்குப்பின் பா ஜ கவின் முன்னேற்ற செயல்களை பார்த்தபின் தான் விழிப்பு வந்ததா?


V RAMASWAMY
மே 18, 2024 18:00

முன் ஏன் வழி வகுக்கவில்லை? அதற்குப்பின் பா ஜ கவின் முன்னேற்ற செயல்களை பார்த்தபின் தான் விழிப்பு வந்ததா?


என்றும் இந்தியன்
மே 18, 2024 17:28

"வழி" யை "வலி" என்று படிக்கவும் மிக மிக சரியான அர்த்தம் அது தான்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை