உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்: சர்ச்சையானதால் பணிந்த நெட்பிளிக்ஸ்

இந்திய மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்: சர்ச்சையானதால் பணிந்த நெட்பிளிக்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'IC 814' என்ற வெப் தொடர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'இந்திய மக்களின் உணர்வுகளுக்கு இனி மதிப்பளிப்போம்' என நெட்பிளிக்ஸ் பதில் அளித்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர்.அங்கு விமானப் பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர். அதன்பேரில், 3 பயங்கரவாதிகளும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, விமானப் பயணிகளை விடுத்தனர்.

IC 814 வெப் தொடர்

இந்த சம்பவத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, IC 814 எனும் வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் வமர்மா, நஸ்ருதின் ஷா, பங்கஜ் கபூர், அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அமைப்பு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹிந்து பெயரை எப்படி வைக்கலாம் என சமூகவலைதளத்தில் விவாதம் அனல் பறந்தது.

மதிப்பளிப்போம்!

இது தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நெட்பிளிக்ஸின் இந்திய உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அவர் இன்று(செப்.,03) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர், நெட்பிளிக்ஸ் தரப்பில் வெளியான அறிக்கையில்,'இனி கதையின் கரு முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Natarajan Ramanathan
செப் 04, 2024 04:48

this serial MUST be banned immediately.


தாமரை மலர்கிறது
செப் 03, 2024 18:54

இயக்குனர் திமுக காரராக இருக்கலாம். வரலாற்றை மாற்றி ஆப்கன் பயங்கரவாதிகள் அங்குள்ள ஹிந்துக்கள் என்று எழுத விருப்பட்டு இருக்கலாம்.


எஸ் எஸ்
செப் 03, 2024 17:59

கதையின் கருவா? என்னவோ சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்கிறானே?


Gopalan
செப் 03, 2024 17:40

Pl remove this serial forthwith This serial is not telling the truth While plane is hijacked by Muslims, why Hindu names are depicted. We are quite anguished


Kalyanaraman
செப் 03, 2024 17:37

சரியான நேரத்தில் உடனடி நடவடிக்கை. மத்திய அரசுக்கு பாராட்டுக்கள். நெட்டஃப்லிஸ் அமெரிக்க நிறுவனம். நம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த அமெரிக்காவின் மறைமுக தாக்குதல் பல வகைகளில் இருக்கும். அதில் இது ஒரு வகை.


Nandakumar Naidu.
செப் 03, 2024 16:41

இவன் நெட்பிளிக்ஸ் இப்படித்தான், வெப் சீரியஸ் வெளியிடுவது அப்புறம் அந்தர் பல்டி அடிப்பது. முதலில் தெரியாதா இந்த அயோக்ய பயல்களுக்கு.


Palani
செப் 03, 2024 16:33

இந்துக்கள்னா இளிச்சவாயர்கள்ன்னு நினைப்பு பல பேருக்கு. இப்போது நடக்கும் பிரச்சினைகள் சின்ன சின்ன பிரச்சனைகள் அதனால கண்டும் காணாத மாதிரி இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் பிரச்சனை பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது அப்போது தெரியும் யார் இளிச்சவாயர்கள்ன்னு.


s sambath kumar
செப் 04, 2024 18:35

நாம ஓவர் பொறுமைசாலி மற்றும் மதத்தின் மீது அவதூறு பரப்புவர்களை வெறுப்பதில்லை, அதான் காரணம்.


DAVID DHAVARAJ
செப் 03, 2024 16:10

அதுசரி.இந்தியாவில் நடந்த சம்பவம் ௭ன்பதால் இந்தியப்பெயர்களை வைத்துள்ளார்களோ?சாதரணமா௧ எடுத்து௧்௧ொள்ள முடியாது.பெயர் மாற்றி படத்தை திரையிடலாம்..விள௧்௧ம் ஏற்புடையதல்ல.


nagendhiran
செப் 03, 2024 16:10

நீங்க அப்படியே செஞ்சிட்டாலும்?


Sridhar
செப் 03, 2024 16:00

எதோ பெருந்தன்மையா விட்டுக்கொடுக்கறமாதிரியில்ல சொல்றானுங்க இனிமே என்ன மதிப்புக்கொடுக்கறது, இப்போ, இப்போவே பேர் அனைத்தையும் ஒரிஜினல் பேருக்கு மாத்தணும். இல்லேன்னா இவனுகள மொத்தமா மூடிட்டு போகசொல்லணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை