உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிரிகளுடன் கைகோர்ப்பதா? ராகுலை மறைமுகமாக சாடிய துணை ஜனாதிபதி

எதிரிகளுடன் கைகோர்ப்பதா? ராகுலை மறைமுகமாக சாடிய துணை ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஒருவர் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்திற்குரியது '', என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.அமெரிக்கா சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகள் இங்கு எதிர்ப்பை கிளப்பி உள்ளது.இந்நிலையில் ராஜ்யசபா குழு ஒன்றின் கூட்டத்தில் ஜக்தீப் தன்கர் கூறியதாவது: நாட்டிற்கு சுதந்திரம் பெறவும், அதனை பாதுகாக்கவும், அதனையும், நாட்டையும் பாதுகாக்க பலர் உயர்ந்த தியாகம் செய்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். நமது சகோதரர், சகோதரிகள் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தாய்மார்கள் தங்களது மகன்களையும், மனைவிகள் கணவன்களையும் இழந்துள்ளனர். நமது தேசப்பற்றை கேலி செய்யக்கூடாது.வெளிநாட்டிற்கு செல்லும் ஒவ்வொரு இந்தியரும், நமது நாட்டின் தூதராக மாற வேண்டும். அரசியல் சாசன பதவியில் உள்ள ஒருவர், இதற்கு எதிர்மாறாக செயல்படுவது வேதனை அளிக்கிறது. நமது நாட்டின் எதிரிகளுடன் சேர்வது கண்டனத்திற்குரியது. சகிக்க முடியாதது. வெறுக்கத்தக்கது. அவர்களுக்கு நாட்டின் மாண்பு பற்றி தெரியவில்லை. 5 ஆயிரம் ஆண்டு பழமையான கலாசாரம் கொண்டது இந்தியா என தெரியவில்லை. பாரதம், அரசியல் சாசனம் மற்றும் தேசிய நலன் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. இதனை பார்த்து மக்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
செப் 13, 2024 06:01

வின்சியின் தேசவிரோத வெளிநாட்டு பயணத்துக்கும், பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் மற்றும் பன்னு போன்ற தீவிரவாதிகளுடனான இணக்கம் போன்றவை குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வைக்க வேண்டும்.


Kasimani Baskaran
செப் 13, 2024 06:01

வின்சியின் தேசவிரோத வெளிநாட்டு பயணத்துக்கும், பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் மற்றும் பன்னு போன்ற தீவிரவாதிகளுடனான இணக்கம் போன்றவை குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வைக்க வேண்டும்.


Murugesan
செப் 12, 2024 21:07

இத்தாலிய அந்நிய மதமாறிக்கு இந்தியதாய் நாட்டு பக்தி எப்படிங்க வரும், வந்தேறிய திராவிட குடும்பம் தமிழனை குடிகாரனாக்கி தமிழகத்தை கொள்ளையடிக்கற அயோக்கியனுங்களும் பப்பு கொலைகாரனும் கூட்டு களவானிகள் தாய்நாட்டு துரோகம் அவங்களுக்கு கை வந்த கலை,


sankaranarayanan
செப் 12, 2024 20:30

அயல்நாட்டில் நமது நாட்டின் பெருமையை குறைவாக பேசிய பாராளுமன்ற நபரை பப்புவை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது பேச வேண்டிய இடம் பாராளுமன்றம் ஒழிய அயல்நாடு அல்ல உச்ச நீதி மன்றமே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


தமிழ்வேள்
செப் 12, 2024 19:39

அரைவேக்காடு பப்பு பையனை நேராகவே திட்டலாம்...இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தின் கதி அதோகதிதான்.....


Narayanan Muthu
செப் 12, 2024 19:36

ராகுல் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரபூர்வமாக மறுப்பு தெரிவிக்க இயலாத இவர்கள் தனி மனித தாக்குதலை தொடுத்து விளம்பரம் தேடி வருகிறார்கள்.


Ganapathy
செப் 12, 2024 21:20

தனிமனித தாக்குதல் பற்றிய அறிவுரை கூறுவது


Kumar
செப் 12, 2024 19:15

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி என்பவர் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் ஆனால் இவர் ஒரு கட்சி உறுப்பினர் மாதிரி ஆளும் கட்சி ஆதரவாக எப்போதுமே பேசி வருகிறார் இதற்கு எதுக்கு அவருக்கு துணை ஜனாதிபதி பதவி.


Hari
செப் 12, 2024 19:49

Pappu is talking against India... Every Indian. Can blast pappu


ஆரூர் ரங்
செப் 12, 2024 20:15

காங்கிரசால் துணை அதிபரான உங்காளு அன்சாரியின் பேச்சுக்களை கேட்பதுண்டா? பாகிஸ்தானி பேசுற மாதிரியே இருக்கும். அப்படியே இஸ்லாமிய அடிப்படைவாதம் போல இருக்கும்.


GMM
செப் 12, 2024 19:12

இந்தியாவில் காங்கிரஸ் உருவாக்கிய விதிகள்/ கால நிர்ணயம் இல்லாத இட ஒதுக்கீடு, மத்திய அரசுக்குள் மாநில அரசு என்ற அந்தஸ்து, பாலியல் குற்றச்சாட்டு மீது ஒரு பக்க நடவடிக்கை மற்றும் சாதியை அறியாதவர் மீது தீண்டாமை புகார் போன்ற அனைத்தும் விதிகளுக்கு உட்படுத்த வேண்டும் / நீக்குவது நல்லது. இவை நாட்டை பிளவுபடித்தி விடும் . ராகுல் குடும்பம் இந்தியா மீது விசுவாசமாக இருந்தது இல்லை. உள்ளுக்குள் இருக்கும் எதிரியை வீழ்த்த வேண்டும். பலனும் பாதிப்பும் சமன் படுத்த வேண்டும்.


தாமரை மலர்கிறது
செப் 12, 2024 18:53

ராகுல் எதிரிகளோடு கைகோர்க்கவில்லை. அவரே பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் தான்.


அப்பாவி
செப் 12, 2024 18:15

இவிங்க போய் அதே மாதிரி ஆளுங்களோடு கை குலுக்கி பேசுனா அது தேஷ்பக்தி ஹை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை