உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்திரப்பதிவு துறையில் ஊழல் : அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

பத்திரப்பதிவு துறையில் ஊழல் : அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: '' பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட வேண்டும்'' இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.இது குறித்து நிருபர்களுக்கு மதுரையில் அண்ணாமலை அளித்த பேட்டி: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lj28ld6q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்து தேவையில்லாமல் திமுக அரசு தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜன.,8ம் தேதி நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்து துறையை நிர்மூலமாக்கியுள்ளது.

எதற்கு எடுத்தாலும் கருணாநிதி பெயர்

ஜல்லிக்கட்டுக்கும் , அலங்காநல்லூருக்கும் சம்மந்தம் இல்லாத பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, கருணாநிதி பெயரை வைப்பதை கைவிட வேண்டும். எந்த குழந்தை பிறந்தாலும் கருணாநிதி என்று பெயர் வைப்போம். அண்ணாத்துரை என்று பெயர் வைப்போம் என சட்டம் போட்டாலும் போடுவார்கள்.

ஒழித்துக் கட்டணும்

அமைச்சர் மூர்த்தி வந்த பிறகு பத்திரப்பதிவு துறையில் இமாலய அளவில் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவு துறையில் எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கின்றனர் .பணத்தை வசூலித்து கொடுக்க ஏராளமான புரோக்கர்கள் உள்ளனர். அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 5 மணிக்கு மேல் கூட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. பத்திரப்பதிவுத்துறை பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியுள்ளது. ஒவ்வொரு பத்திரப்பதிவு துறை அலுவலகத்திலும் மாலை 5மணிக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் கட்டு கட்டாக பணம் கிடைக்கும்.

பா.ஜ., போராட்டம்

இந்த போக்கு மாறாவிட்டால் பா.ஜ., போராட்டம் நடத்தும். திருப்பரங்குன்றத்தில் கடவுள் பெயரில் ஒரு புரோக்கர் இருக்கிறார். பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் வீட்டில் சோதனை நடத்தினால் கிடைக்கும் பணத்தில் தமிழகத்தில் உள்ள பாதியளவு கடனை அடைத்து விடலாம். 2024ம் ஆண்டு தேர்தல் மோடி என்கிற மனிதருக்கான தேர்தல். பிரதமர் வேட்பாளராக மற்றவர்களின் பெயரை கேட்டாலே சிரிக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ., வலுவாக இருக்கிறது. மோடியை பிரதமராக்க ஏற்பவர்களோடு பா.ஜ., கூட்டணி அமைக்கும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Narayanan
ஜன 08, 2024 12:27

திமுகவை வீட்டுக்கு அனுப்பாவிட்டால் கருணாநிதி நாடு என்று கூட தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார்கள் . உஷார்


K.n. Dhasarathan
ஜன 06, 2024 22:50

உழலைப்பற்றி அண்ணாமலை பேசலாமா? உங்கள் கட்சியை பின்னால் திரும்பி பாருங்கள், பாதி எம் பி க்கள் கிரிமினல்கள், கொலை , கொள்ளை, மற்றும் ஏமாற்று வேலைகள் செய்து போலீஸ் வரை போயி, பிறகு பொய் ஜே பி க்கு வந்து புனிதர் ஆனவர்கள் அடுத்து பெயர் வைத்தல், இறந்தவர் நினைவாக வைப்பது வழக்கம், நீங்கள் பிரதமர் உயிருடன் இருக்கையிலே அவர் பெயரில் விளையாட்டு மைதானம் , நியாயமா? அப்புறம் உங்கள் குரு , யாரு ? அமித் ஷா தான், மோதிலால் பெயரை ஒரு மியூசம்மில் இருந்ததை இப்போது பெயர் மாற்றம் செய்கிறார், இன்னும் அவருக்கு பாட்டன், பூட்டன் பெயரை தேடி தேடி மாற்றி கொண்டு இருக்கிறார், அவருக்கு நல்ல வேலை ஏதும் கொடுங்கள், அல்லது மணிப்பூர் அனுப்பி வையுங்கள்.பாவம் இங்கே ரொம்ப கஷ்டப்படுகிறார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2024 20:37

டீம்கா எதுலதான் ஊழல் பண்ணல ????


திகழ்ஓவியன்
ஜன 06, 2024 21:04

7600000000000000000000000000000000000000 கோடி யாரும் கேடிஜி கிட்ட நெருங்க chance இல்ல / தங்க ரோடு ஒரு KM 290 கோடி , நிவாரணம் கொடுத்ததே 496 கோடி அனால் ரோடு ஒரு km 290 கோடி அருமை


Suppan
ஜன 06, 2024 21:25

திகழு சாதாரண சாலைக்கும், சுரங்கம், மேல் சாலை, கீழ்சாலை என்று அமைப்புக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்யாசம். சம்பந்தப்பட்ட அமைச்சர் நிதின் கட்கரி இதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறவும்.


DVRR
ஜன 06, 2024 19:17

என்னாது பதிவுத்துறையில் ஊழலா???எங்கும் எதிலும் எப்போதும் எவ்வழியிலும் ஊழல் தானே திருட்டு திராவிட மாடல் சித்தாந்தம்???வெறும் பதிவுத்துறையில் மட்டும் மட்டும் மட்டும் தான் ஊழலா???


Suppan
ஜன 06, 2024 21:26

பின் எப்படி மூர்த்தி 150 கோடி செலவழித்து திருமணம் நடத்தமுடியும்?


திகழ்ஓவியன்
ஜன 06, 2024 19:01

என்ன அண்ணாமலை அமலாக்க துறை அனுப்பி மிரட்டும் நீங்கள் இதற்கு ஒரு ஏற்பாடு செயுங்கள்


K.Ramakrishnan
ஜன 06, 2024 18:43

அமலாக்கத்துறையில் இருந்து விசாரணை நடத்தாம இருப்பதற்கே லஞ்சம் வாங்குறாங்களே... ஒரு சாதிப்பெயரை கூறி சம்மன் அனுப்பியதே உங்க மத்தியஅரசின் துறை தானே... உங்க கிட்ட ஆயிரம் அழுக்கு இருக்கு.. முதலில் அதை துடையுங்கள் சார்... பிறகு மற்றவர்களை குறை கூறுங்கள்.. அரசியலில் எந்த கட்சியுமே யோக்கியமான கட்சி கிடையாது.


ராஜா
ஜன 06, 2024 21:12

அமலாக்க துறை ஏன் அணிலிடம் வாங்கவில்லை?


Suppan
ஜன 06, 2024 21:32

அதானே ராம் சாமிதான் சாதியை ஒழித்துவிட்டாரே அதெப்படி சாதிப்பெயரைப் போட முடியும். எதோ ஒரு ஆவணத்தில் இருந்ததனால்தானே போடப்பட்டுள்ளது? எவ்வளவு பேர் சாதி பார்க்காமல் திருமணம் நடத்துகிறார்கள்.? சாதி பார்த்தத்தானே வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்? இந்த திருட்டு கழகங்களை தேவர் என்று சொல்லாமல் முத்துராமலிங்கம் என்று சொல்லச் சொல்லுங்கள் அந்த செந்தில்குமார் "எங்க அப்பா வடிவேல் கவுண்டர்" என்று கூறினாரே அதெல்லாம் பரவாயில்லையா?


AMSA
ஜன 06, 2024 22:20

ஏன் துரைமுருகனிடம் வாங்கவில்லை .. பதில் சொல்லுங்க MR ராமகிருஷ்ணன் .....


கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 17:13

அண்ணாத்தே இங்கேயாவது, அதாவது மாநில அரசு அலுவலகங்களிலிலாவது அஞ்சு ரூபா, பத்து ரூபா வாங்குறாங்க... ஆனா உங்க கட்சி ஆட்சி செய்யும் மத்திய அரசு அலுவலகங்களில் அடிக்குறாங்க பாரு? மொத்தமா ஆட்டய போடுறானுங்க....?


ராஜா
ஜன 06, 2024 21:13

நீ எதற்கு எவ்வளவு கொடுத்தாய்?


AMSA
ஜன 06, 2024 22:21

வெக்கமே இல்லாம ஒரு கருத்து போடுறானுங்க பாருங்க


விடியல்
ஜன 06, 2024 15:48

ஊழல் இல்லாத துறை ஏதும் உள்ளதா


அப்புசாமி
ஜன 06, 2024 15:38

அவருக்கு ஓட்டுப் போட்டால் பாஞ்சி லட்சம், ரெண்டுகோடி வேலை, சொந்த வூடு கூட இன்னும் ஏதாவது கிடைக்கும்.


J.Isaac
ஜன 06, 2024 15:37

இந்தியா முழுவதும் நடக்கிற அக்கிரமம் தானே


AMSA
ஜன 06, 2024 22:22

இந்த மாதிரி மோசமான ஆட்சியை உன் வாழ்க்கையில் பார்த்ததுண்டா


AMSA
ஜன 06, 2024 22:22

அளவுக்கு அதிகமான மத வெறி இருந்தால் .. அதே மத வெறி எதிரிக்கும் உருவாகும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை