உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "கட்டட கலையை பிரதிபலிக்கும் இந்திய விமான நிலையங்கள்": மத்திய அமைச்சர் பெருமிதம்

"கட்டட கலையை பிரதிபலிக்கும் இந்திய விமான நிலையங்கள்": மத்திய அமைச்சர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛இந்திய விமான நிலையங்களில் நவீன கட்டட கலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்'' என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய விமான நிலையங்கள் கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அயோத்தியில் விமான நிலையத்தின் உள்ளே, ராமரின் வாழ்க்கை பயணம் குறித்து விபரங்கள் கலை வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் திருச்சி விமான நிலையத்தில் ரங்கநாத சுவாமி கோயில் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், நவீன கட்டட கலையை உருவாக்க முயற்சிக்கிறோம். இது வளரும் கலைஞர்கள் தனது திறமையை வெளிப்படுத்த, உதவியாக அமையும். இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K.Ramakrishnan
ஜன 29, 2024 18:44

கட்டட கலையை பிரதிபலித்து என்ன பயன்? மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லையே... விமான நிலையங்கள் எப்படி இருந்தால் என்ன? நம்ம இந்திய அரசுக்கு என்று இருந்த விமானங்களை எல்லாம் விற்று விட்டு, இப்படி பெருமை பேசுவது சரியா?


chennai sivakumar
ஜன 29, 2024 17:48

உண்மை. இன்று நான் அந்தமான் விமான நிலையத்தை பார்த்து பிரமித்து விட்டேன்


அப்புசாமி
ஜன 29, 2024 16:58

நம்ம விமானங்களையே புஷ்பக விமானங்களா மாத்தி அசத்துங்க. ராமாயணத்தில் டிசைன் இருக்காம்.


NALAM VIRUMBI
ஜன 29, 2024 11:22

இதுதான் சனாதன தர்மத்தை பின்பற்றும் தேசத்தின் அடையாளம். சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்குப் பின்னர் தான் காலம் கணிந்திருக்கிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை