உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2,800 நாய்களை கொன்றேன்: சிறை செல்ல தயார் என்கிறார் மஜத தலைவர்

2,800 நாய்களை கொன்றேன்: சிறை செல்ல தயார் என்கிறார் மஜத தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: '' குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 2,800 நாய்களை கொன்றுள்ளேன். தேவைப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன் ,'' என மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் சட்டசபையில் பேசியுள்ளார்.மத சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்சியான எஸ்எல் போஜேகவுடா சட்டசபையில் பேசியதாவது: நாங்களும் விலங்குகள் மீது கவலை கொள்கிறோம். ஆனால், விலங்கின ஆர்வலர்கள் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளனர். நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இது குறித்து தினமும் டிவியிலும், நாளிதழ்களிலும் செய்தி வருகின்றன. சிக்மகளூருவில் உள்ளாட்சி அமைப்பின் தலைவராக இருந்த போது, இறைச்சியில் ஏதோ ஒன்றை கலந்து 2800 நாய்களுக்கு கொடுத்தோம். பிறகு அந்த நாய்களை தென்னை மரங்களுக்கு அடியில் புதைத்தோம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிறைக்கு செல்ல வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தெரு நாய்களை அப்புறப்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ள நிலையில், கர்நாடகாவிலும் மாணவர்கள் சிலர் நாய்களால் பாதிக்கப்பட்டது குறித்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. அதன் மீதான விவாதத்தில் எம்எல்சியின் பேசும்போது இந்த தகவலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஆக 14, 2025 04:50

இவர் செய்தது ஒருவகையில் சரியே , ஒரு கட்டம் வரை நாயை வளர்த்து பின்னர் வேறொரு ஏரியா போயி அந்த நாயை வீதியில் விட்டுவிட்டு செல்லும் மக்கள் அதிகரித்து வருகிறார்கள் , அந்த நாய்கள் எஜமான் கொடுத்த சொகுசு காணாமல் அலையும் பொது வெறிகொண்டு போவோர் வருவோரை எல்லாம் கடித்து வைக்கிறது , இப்போ யாரை கொள்ளவேண்டும் மஜத தலைவரே ?


Anantharaman Srinivasan
ஆக 13, 2025 23:52

தெருக்களிலிருந்து நாய்ளை அப்புறப்படுத்த வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துயிருக்ககூடாது. சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் குழந்தைகள் நன்மையை கருதி ஒத்துப்போகவேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 13, 2025 23:46

டில்லிக்கு போயி உங்க கூட்டணி தலைவரிடமிருந்து அர்ச்சுனா அவார்டு வாங்கிக்குங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை