உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனப்படுகொலை செய்கிறார் முகமது யூனுஸ்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

இனப்படுகொலை செய்கிறார் முகமது யூனுஸ்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்கிறார்,'' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார்.வங்கதேசத்தில் எழுந்த போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, டில்லியில் தங்கி உள்ளார்.இதன் பிறகு தற்போது முதன்முறையாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் பேசினார்.அப்போது ஷேக் ஹசீனா கூறியதாவது: வங்கதேச பிரதமர் அலுவலகத்தை நோக்கி ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்தால், பலரின் உயிர் பறிபோயிருக்கும். இது 25 -30 நிமிடங்களில் நடந்து இருக்கும். நான் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன். இருப்பினும், பாதுகாவலர்களிடம், என்ன நடந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் எனக்கூறினேன். இன்று, நான் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். ஆனால், முகமது யூனுஸ் தான் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட விதத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளார். இந்த இனப்படுகொலையின் மூளையாக மாணவ சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முகமது யூனுஸ் ஆகியோர் உள்ளனர்.ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் என யாரையும் விடவில்லை. தேவாலயங்கள் சூறையாடப்பட்டுள்ளன. கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினால், அந்த மதத்தின் தலைவரை கைது செய்கின்றனர். எதற்காக சிறுபான்மையினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அவர்களை இரக்கமின்றி துன்புறுத்துவது ஏன்? அங்கு மக்களுக்கு நீதி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. நான் ராஜினாமா செய்யக்கூட நேரம் தரப்படவில்லை. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Madras Madra
டிச 05, 2024 10:26

சிறுபான்மையினர் வாழ்வாங்கு வாழ்வது இந்தியாவில்தான் அதுதான் ஹிந்துக்களின் நாகரீகம் நீ மாறினால் உன் நாகரிகமும் மாறும் மனித தன்மையும் மாறும் வங்கம் என்ற சிறந்த பாரத இனம் இன்று நிலை மறந்த சிலரால் தன் அடையாளம் இழந்து கேவலப்பட்டு நிற்கிறது இது மேற்கு வங்காளத்திலும் நடக்கலாம்


sankar
டிச 05, 2024 10:01

தவறான செய்தி பரப்புவதில் இருநூறுகள் கில்லாடிகள்


அப்பாவி
டிச 05, 2024 09:36

கடந்த 15 வருஷமா ஹசீனா ஆட்சியில் 17 பில்லியன் டாலர் உறிஞ்சி எடுத்திட்டராம். அந்நாட்டு செண்ட்ரல் பேங்க் சொல்லுது.


Barakat Ali
டிச 05, 2024 10:41

அப்போ ஷேக் ஹசீனா திராவிட மாடல் ஆட்சியைத்தானே நடத்தியிருக்கார் ????


சண்முகம்
டிச 04, 2024 22:58

பங்களா தேசத்தில், முகமது யூனுஸ் நம்மூரு மோடி மாதிரி கண்டுக்காம கணக்கா இருக்காரு போல.


Visu
டிச 04, 2024 23:38

இறங்கி அடிச்சா அய்யோ இஸ்லாமிர்களை அழிக்கிறார் னு சொல்லுவ


N Sasikumar Yadhav
டிச 05, 2024 00:36

பிரியாணி பாசம் உங்கள விட்டு போகாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை