உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஜனநாயகத்தை நிலை நிறுத்துங்கள்": ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

"ஜனநாயகத்தை நிலை நிறுத்துங்கள்": ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் 7 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

அதிருப்தி

கடிதத்தில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. பல புகார்கள் வந்தாலும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும்.எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றன. லோக்சபா தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்திய விதம் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

நெருக்கடி

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும். ஆளும் பா.ஜ., அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருக்காது. பா.ஜ.,தோற்றால் அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கக்கூடும். தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், தேர்தல் கமிஷன் தனது கடமையை செய்யவில்லை.

விபரீத சூழல்

லோக்சபா தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் அவநம்பிக்கை தருகின்றன. ஓட்டு எண்ணிக்கையின் போது விபரீத சூழல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்னைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் வந்தால், சுமுகமாக இருக்காது; வன்முறையில் முடியும் ஆபத்து உள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 174 )

Kanns
ஜூன் 28, 2024 09:01

For Most Social Maladies, Advocate-Judges are Responsible. Sack & Punish Judges Not Punishing Vested False Complainant Gangs& Power-Misusing Rulers-Officials.


Krishna Murthy A
ஜூன் 06, 2024 20:33

நீதி அரசர்களே முதலில் நீங்கள் நீதியை நிலைநாட்ட கடிதம் எழுதுங்கள் ஊழல் பெருச்சாளிகள் முழுதும் உங்களிடம் கட்டிங் கொடுத்து பெயில் வாங்கி வெளியில் உலாவருகிரார்கள்.


sundarsvpr
ஜூன் 06, 2024 17:11

சிறுபான்மையினர் யார் என்பதே கேள்விக்குரியது மதங்களை வைத்து சிறுபான்மையனர் என்று முடிவு செய்தால் தேசிய இறையாண்மை மங்கிவிட்டது என்றுதான் கருதவேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் கூட இயற்கை மரபுக்கு மாறாக உள்ளது இது தான் விதி.


Swaminathan Chandramouli
ஜூன் 06, 2024 14:53

தற்போதைய நிலையில் உச்ச நீதி மன்றம் அர்பன் நக்ஸால் களை நீதிபதிகளாக நியமித்து அவர்கள் இஷ்ட்டபடி தீர்ப்பு சொல்ல வைக்கிறது


R SRINIVASAN
ஜூன் 06, 2024 08:22

இந்திரா அம்மையார் எமெர்ஜென்சியை கொண்டுவந்து தேசத்தலைவர்களை சித்திரவதை செய்தபொழுது நீதித்துறை என்ன செய்தது .1975-ல் பாராளுமன்றத்தின் காலம் முடிந்தவுடன் அதை ஏன் கலைக்கவில்லை நீதித்துறை என்ன தூங்கிக் கொண்டிருந்ததா? பிஜேபி நேர்மையாக ஆட்சி செய்தால் அதைக்குறை கூறுகிறீர்கள். அஸ்ஸாமில் ரோஹிங்கிய முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியேத்ரி அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து மானங்கெட்டமுறையில் காங்கிரஸ் ஜெயித்ததே அன்று நீதித்துறை என்ன செய்தது மொரார்ஜி தேசாய்-ன் நல்லாட்சியை சரண்சிங்-I கையில் போட்டுக்கொண்டு கலைத்து கேவலமான முறையில் பதவியில் உட்கார்ந்தாரே அப்பொழுது உங்கள் நீதித்துறை என்ன செய்தது .அராஜகத்தின் மறு உருவம் இந்திரா .பிந்தரன்வாலேயை மொரார்ஜி தேசாய்க்கு எதிராக தூண்டிவிட்டு தீவிரவாதத்தை வளர்த்தார் இந்திரா அப்போது நீதித்துறை என்ன செய்தது சஞ்சய் காந்தி செய்த அட்டூழியம் கொஞ்ச நெஞ்சமா .Y V .CHANDRACHUD அவர்களே வரலாரை புரட்டிப்பாருங்கள்


Sankara Subramaniam
ஜூன் 05, 2024 21:48

கணம் நீதியரசர்களே உங்களது ஜனநாயக கூக்குரல் நன்றாக உள்ளது. இக்கூக்குரல் ஊழல் திமுக அமைச்சர்களின் தண்ட ணைகளை உச்ச நீதி மன்றம் நிறுத்தி மறுபடியும் பதவி பட்டாபிக்ஷேகம் நடத்திய போது எங்கே சென்றீர்ள். நீதி தேவதை யின் காதுகளையும் பொத்திவிட்டனர்


Sundaram Bhanumoorthy
ஜூன் 05, 2024 18:27

நாட்டை முதலில் ‌உங்களை போல் ஒரு வழக்கை நான்கு ‌தலைமுறை நடத்தும் நீதிபதிகளிடம் இருந்துதான் காப்பாற்ற‌ வேண்டும்.வயித்து புழைப்புக்கு திருடினவன் ஜெயிலில் சாகணும்.7000 கோடி கொள்ளைக்காரன், அரசியல்வியாதிகளுக்கு‌ பெயில்


Nagarajan Thamotharan
ஜூன் 05, 2024 17:30

தமிழகம் மற்றும் பீகார் மாநில உளவுத்துறை மற்றும் காவல்துறை மாநில முதல்வர்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் அதே சமயம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கவர்னருக்கு அச்சம் உள்ளதாக கடிதம் எழுதியிருப்பது முதல்வரின் ஆளுமைக்கு களங்கம் விளைவிப்பதாகவே எடுத்து கொள்ள வேண்டும். மாநில அரசுகள் தேசவிரோத சக்திகளுக்கு உடன்போய் விட்டது என்பதை போதைக்கடத்தல் வழக்கில் தமிழக அரசின் திருட்டுதனம் வெளிப்படையாகவே தெரிகிறது.


raja
ஜூன் 05, 2024 17:12

எனக்கு ஒன்றும் புரியவில்லை சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லியே எவ்வளவு காலத்திற்கு கயவர்கள் ஒட்டுமொத்த பெரும்பான்மை சமூகங்களை ஒடுக்க நினைக்கிறார்கள்??? இதில் வேறு நீதிபதிகள் எங்க போறீங்க தேர்தல் வந்தால் மட்டும் வந்து குறைக்கிறீர்கள்???


Sampath
ஜூன் 05, 2024 16:23

இத்தனை நாள் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் அளித்த தீர்ப்புகள் எப்படி இருந்திருக்கும் என்பதை இதைப் படிப்பவர்களால் நிச்சயம் உணர முடியும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை