உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "என் மீது அவதூறு பரப்புகின்றனர்": ராகுல் குற்றச்சாட்டு

"என் மீது அவதூறு பரப்புகின்றனர்": ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினர் என் மீது அவதூறு பரப்புகின்றனர்' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.டில்லியில் நடந்த மாநாட்டில் ராகுல் பேசியதாவது: நான் தீவிரமாக இல்லை. அரசியலில் ஆர்வம் இல்லை என்கிறார்கள். எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை கண்டு பிரதமர் மோடி பீதியடைந்துள்ளார். பிரதமர் மோடி பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார். இதை நாங்கள் மக்களுக்கு திருப்பி வழங்குவோம்.

ஜாதியின் மீது ஆர்வம் இல்லை

90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை தடுக்க நான் குரல் கொடுத்து வருகிறேன். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினர் என் மீது அவதூறு பரப்புகின்றனர். ராமர் கோயில், புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவிற்கு, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு அழைப்பில்லை. எனக்கு ஜாதி மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீது தான் ஆர்வம்.

தேசபக்தி

ஊடகங்கள், நீதித்துறை, தனியார் மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்களில் ஓபிசி, தலித் மற்றும் ஆதிவாசிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். ஒரு தேசபக்தியுள்ள நபர் இந்தியாவுக்கு நல்லது செய்ய வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

அதற்காக நாம் 90 சதவீத மக்கள்தொகையின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். பிரதமர் மோடி எல்லோரிடமும், தான் ஓபிசி என்று கூறுகிறார். நான் ஜாதிவாரி கணக்கெடுப்பை பேச ஆரம்பித்தபோது, ​​ஜாதி இல்லை என்கிறார். பணக்காரர், ஏழை என இரண்டே ஜாதிகள் என்று சொல்கிறார். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

பேசும் தமிழன்
ஏப் 24, 2024 21:22

பிஜேபி கட்சியை விட மோசமாக ...உங்கள் புள்ளி வைத்த இண்டி கூட்டணி ஆள் ... கம்மிகள் தான் உங்களை கழுவி ...கழுவி ... ஊற்றுகிறார்கள்....அவர்களை சொல்கிறீர்களா ???


Nithy J.R
ஏப் 28, 2024 14:37

நல்ல பதிவு


பேசும் தமிழன்
ஏப் 24, 2024 21:19

எப்போதும் நீங்கள் தானே அடுத்தவர் மீது அவதூறு பரப்புவீர்கள் ....அந்த விஷயத்தில் உங்களை யாரும் அடிச்சிக்க முடியாது.


Balasubramanian
ஏப் 24, 2024 18:13

ரூ 16 லட்சம் கோடி ரூபாயை 140 கோடி மக்களுக்கு பகிர்ந்து அளித்தால் ஆளுக்கு ரூ 11453 மட்டுமே வரும் ராகுல் ஜி! ஒரு மாதம் ஓட்டலாம்! பிறகு என்ன செய்வது? வேண்டுமானால் ஒரு உபாயம் செய்யலாம்! அனைவரின் வருமானத்தையும் சொத்துக்களையும் ஒரே வங்கியில் செலுத்தி விட்டு - பிறகு உங்களுக்கு எப்படி தோணுதோ அது மாதிரி பிரித்தது கொடுக்கலாம் என்று அனைவரும் ஒப்புக் கொள்ளலாம் - முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஆரம்பித்து வையுங்கள் ! ?


GoK
ஏப் 24, 2024 17:16

இவர்களின் கூட்டாளிகளே இவரின் ரத்தம் பரிசோதனை செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளனர்


என்றும் இந்தியன்
ஏப் 24, 2024 17:06

எங்கள் நடவடிக்கையில் அது உண்மையான வார்த்தை???அதாவது நீங்க செய்வதை சொல்வதை உண்மையாக வெளியிடுகின்றோம்


A1Suresh
ஏப் 24, 2024 15:26

வட இந்தியாவில் கான்கிராஸ் கட்சியை வீட்டு அனுப்பி விட்டார்கள்... இனி தென்னிந்தியாவிலும் செய்வார்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 24, 2024 15:26

இவரை பற்றி அவதூறு கூறுபவர்கள் வேறு யாரும் இல்லை இவரது புள்ளி வைத்த இண்டி கூட்டணியில் உள்ளவர்கள் தான் இவரது பிறப்பின் மீதே அவதூறு கூறுபவர்கள் அவர்களே இவருக்கு எதிராக தேர்தல் போட்டி இடுபவரும் இவருடைய கூட்டாளி கட்சியின் உயரிய தலைவரின் ஆகவே முதலில் இவர் அவதூறு குறித்து இவரது கூட்டாளிகளிடம் தான் கேட்க வேண்டும்


A1Suresh
ஏப் 24, 2024 15:25

சோனியாகாந்தி பிரதமராக வந்தால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள்


Vijay
ஏப் 24, 2024 14:54

நீங்க அவ்வளவு வொர்த் எல்லாம் இல்ல


குமரி குருவி
ஏப் 24, 2024 13:18

கேரளா பக்கம் போகாதே


முக்கிய வீடியோ