உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெறுவோம்: அமித்ஷா நம்பிக்கை

விவசாயிகளின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெறுவோம்: அமித்ஷா நம்பிக்கை

புதுடில்லி: ''விவசாயிகளின் ஒத்துழைப்போடு 2027ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு, பருப்பு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவோம்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த கருத்தரங்கில் அமித்ஷா பேசியதாவது: வரும் நாட்களில் விவசாயத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம். உளுத்தம்பருப்பு உற்பத்தி செய்வதில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம் என்பது உண்மைதான். மீதம் உள்ள பருப்புகளை இன்றும் இறக்குமதி செய்கிறோம்.தண்ணீர் வளம் பெருகும் இந்தியா போன்ற விவசாய நாட்டில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வது மரியாதைக்குரியது அல்ல. அதனால்தான் பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். விவசாயிகளின் ஒத்துழைப்போடு 2027ம் ஆண்டு டிசம்பருக்கு முன் பருப்பு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 05, 2024 01:32

விவசாயிகளை நாம் பேணிக்காத்தால், வரும் காலம் வளமான காலமாக மாறும் என்பதில் ஐயமில்லை. விவசாயிகளை போற்றுவோம். 'போலி' விவசாயிகளை, களையெடுப்போம்..


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:10

பருப்பு இறக்குமதிக்கு தடை விதித்தது மஹா தவறு. உள்ளூரில் போதிய அளவு தரமான பருப்பு வகைகள் கிடைப்பதில்லை, குறிப்பாக துவரம் பருப்பு.. Export Quality பருப்புகள் இந்தியாவில் அதிகம் விளைவதில்லை. அப்படியே இருந்தாலும் போதியளவு உற்பத்தி இல்லை. அப்படியே உற்பத்தி செய்தாலும் விலை அதிகம். இப்படி இருக்கையில் ஏன் இறக்குமதி தடை செய்ய வேண்டும்? தரமான பருப்பு வகைகள் இறக்குமதி செய்வதால் இந்தியாவில் பருப்பின் விலை குறையும் தானே ? மூட்டை மூட்டையாக பருப்பு பதுக்குவோர் அலறுவோர் தானே ? சாதாரண மக்களும் தரமான பருப்பு வகைகளை குறைந்த விலையில் கிடைக்கும் தானே ? மக்கள் ஆரோக்கியமான புரத சத்துடன் வாழ்வார்கள் தானே ? இதனால் புரத சத்து குறைபாடு கொண்ட மக்கள் எண்ணிக்கை குறையும் தானே ? என்னதான் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவித்தாலும், இறக்குமதியை தடை செய்வது முட்டாள்தனமான நடவடிக்கையே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை