உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "உறவை வலுப்படுத்த விருப்பம்": தென் ஆப்ரிக்கா அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

"உறவை வலுப்படுத்த விருப்பம்": தென் ஆப்ரிக்கா அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவின் அதிபராக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிரில் ராமபோசாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா (வயது 71) இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிரில் ராமபோசாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன். தென் ஆப்ரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிரில் ராமபோசாவுக்கு வாழ்த்துக்கள்''. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
ஜூன் 18, 2024 10:51

காந்தியை பத்தி அவருக்கு சொல்லுங்க. யாருக்கும் தெரியாது.


sankaranarayanan
ஜூன் 17, 2024 21:14

தென் ஆப்ரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா என்று கேட்கும்போதே தெரிகிறது அவரும் நமது நாட்டிலிருந்து அங்கே சென்ற அகதியாக இருக்குமோ என்று ஏனென்றால் அவர் பெயரிலும் ராம என்று உள்ளது எங்கும் ராம எதிலும் ராம எப்போதும் ராம


P. VENKATESH RAJA
ஜூன் 17, 2024 19:52

அண்டை நாடுகளுடன் உறவுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ