உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறினார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரவிநாத் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்தியா யாரையும் வெறுத்தது கிடையாது. ஆனால், அதிகாரம் இருக்கும் போது தான் அன்பு மற்றும் நலன் குறித்த புரிதலை உலகம் கவனிக்கும். இதுதான் உலக நியதி. இந்த நியதியை மாற்ற முடியாது. எனவே உலகின் நலனுக்காக, நாம் சக்திவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். நமது பலத்தை உலகம் பார்க்க வேண்டும்.உலக நலனே நமது மதம். இது தான் ஹிந்து மதத்தின் உறுதியான கடமை. பெரிய அண்ணனாக இந்தியா, உலகின் அமைதி மற்றும் நலனுக்காக பணியாற்ற வேண்டும். இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவில் பிரச்னை ஏற்பட்ட போது, இந்தியா தான் முதலில் அவர்களுக்கு உதவியது. இந்தியாவில் தியாகத்திற்கான பாரம்பரியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மீனவ நண்பன்
மே 17, 2025 23:29

நாமே காப்பாற்றிக்கொள்ளும் வல்லமை தேவை நாமே ஆயுதங்களையும் போர் விமானங்களையும் தயாரிக்க வேண்டும் . ரஷியா மற்றும் இஸ்ராயேலிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் இந்த விஷயத்தில் வடகொரியாவிடமும் கற்றுக்கொள்ளலாம் ..


KRISHNA
மே 17, 2025 23:06

அற்புதமான பேச்சு. ஜெய் ஹிந்த்.


புதிய வீடியோ