உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலத்த காற்றால் கீழே விழுந்து நொறுங்கிய 35 அடி உயர சிவாஜி சிலை: எட்டே மாதத்தில் சேதம்

பலத்த காற்றால் கீழே விழுந்து நொறுங்கிய 35 அடி உயர சிவாஜி சிலை: எட்டே மாதத்தில் சேதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவின் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பரில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை, பலத்த காற்று காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.இந்திய கடற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்படை சார்பில், கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில், இன்று (ஆக.,26) பலத்த காற்றின் காரணமாக, சிவாஜயின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. இதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், திறக்கப்பட்டு எட்டே மாதத்தில் சிலை சேதமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

shakti
ஆக 27, 2024 19:39

35 லட்சம் ரூபாயில் கடற்படையால் அமைக்கப்பட்ட சிலையை 3500 கோடியில் அமைக்கப்பட்ட இல்லை என்று புளுகும் பல திராவிட பதர்கள் இங்கு உலவுகிறார்கள் ..


Jayabalan Periyasamy
ஆக 27, 2024 17:13

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை ஏறத்தாழ 190 அடிக்கு மேல் பல ஆண்டுகளாக நிற்காமல் இருக்கிறது. நம் நாட்டில் சிலை நிறுபுபவர்கள் இம்மாதிரி நிறுவி வருகிறார்கள். இது நம் நாட்டின் சாபக்கேடு. ஒரு மாபெரும் மன்னனின் சிலையை ரூபாய் 3500 கோடி செலவு செய்தும் இம்மாதிரி ஆகிவிட்டது. சிலை நிறுவும் பொழுது சாதாரண அடிப்படை விஷயங்களான சிலையின் உயரம் சிலையின் கனம் மற்றும் அதன் மற்ற பரிமாணங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிலையை நிறுவி இருந்தால் இம்மாதிரி ஆகி இருக்காது.


Saravanaperumal Thiruvadi
ஆக 27, 2024 16:36

சிலைக்கு செய்த செலவு 3500 கோடி ரூபாய்


Saravanaperumal Thiruvadi
ஆக 27, 2024 16:35

3600 கோடி ரூபாய் ஐயா


அப்பாவி
ஆக 27, 2024 11:56

அதிகமா காற்றை வீச வெச்சது அந்த நேருதான்.


தஞ்சை மன்னர்
ஆக 27, 2024 14:07

ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன் எல்லாத்துக்கும் நேருதான் காரணம்


Anantharaman Srinivasan
ஆக 26, 2024 23:55

அதானி அம்பானி கம்பெனியெல்லாம் உருப்படியா லாபம் பார்க்கின்றனவே.


venugopal s
ஆக 26, 2024 22:00

அவர் கை வைத்தது எதுவுமே உருப்படாதோ?


Kumar Kumzi
ஆக 26, 2024 23:34

கள்ளக்குறிச்சில பத்து லட்சம் ஓவாவுக்கு வழி செய்துட்டு போயிருந்தினா டுமீல் நாடு நன்றாக இருந்திருக்கும்


சொல்லின் செல்வன்
ஆக 26, 2024 21:39

முட்டுக்கொடுக்க வாரியலா


theruvasagan
ஆக 26, 2024 19:41

இந்த சிலைகள் அதுவும் பிரம்மாண்டமான சிலைகள் நிறுவும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.


தாமரை மலர்கிறது
ஆக 26, 2024 19:24

பருவநிலை மாறிவருவதை கருத்தில் கொண்டு, சிலைகளை முறையாக டிசைன் செய்யவில்லை. அதனால் தான் விழுந்துவிட்டது. இந்த சின்ன விஷயத்தை பெரிதுபடுத்த தேவை இல்லை.


பாமரன்
ஆக 26, 2024 20:01

கரீக்டுங்கோ... பயங்கர வெள்ளத்தில் சாதாரண தடுப்பணை டேமேஜ் ஆனால் தான் முதலமைச்சர் காரணம்னு ராஜினாமா செய்ய சொல்லனும்


Kasimani Baskaran
ஆக 26, 2024 20:59

"பயங்கர வெள்ளத்தில்" - முட்டு பயங்கரமாக இருக்குது...


சமீபத்திய செய்தி