உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விழுந்தது 3வது விக்கெட்: பணமில்லாததால் தேர்தலில் இருந்து விலகும் காங்., வேட்பாளர்

விழுந்தது 3வது விக்கெட்: பணமில்லாததால் தேர்தலில் இருந்து விலகும் காங்., வேட்பாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர், செலவு செய்ய பணம் இல்லாததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.லோக்சபாவுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து அந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார். ம.பி., மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர், கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிகழ்வுகள் காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் 3வதாக ஒடிசா மாநிலம் புரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, அக்கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அத்தொகுதி வேட்பாளராக சுசரிதா மொகந்தி என்ற பத்திரிகையாளர் அறிவிக்கப்பட்டார். சொந்த செலவில் தேர்தலை சந்திக்கும்படி, ஒடிசா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார் கூறியதாக சுசரிதா தெரிவித்தார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், பொது மக்களிடம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்கவில்லை. தேர்தலில் செலவு செய்ய போதுமான பணம் இல்லாததால் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக காங்கிரஸ் மேலிடத்திற்கு சுசரிதா கடிதம் எழுதி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
மே 05, 2024 00:14

காங்கிரசுக்கு பணமில்லை என்பது மோடியின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும் கள்ளத்தனமாக செலவு செய்ய வழியில்லாமல் பல அனாமத்து கணக்குகளை முடக்கியதால் வந்த சிக்கல் நிதி மன்றமும் காங்கிரசுக்கு சாதகமாக ஆடுவதைபார்த்தால் நூறு சதவிகிதம் உண்மை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது


Satheesh Kumar
மே 04, 2024 21:41

விடியல் தோத்தா தான் இப்படி எல்லாம் சொல்லும் உபிஸ்,


ஆரூர் ரங்
மே 04, 2024 20:56

வெல்ல வாய்ப்பில்லாத தொகுதிகளுக்கு செலவழிக்க வாத்ரா மேலிடம் முட்டாளில்லை.


Ramesh Sargam
மே 04, 2024 20:25

காங்கிரஸ் வேட்பாளரிடத்தில் பணம் இல்லையா? யார் காதுல பூ சொருகுகிறீர்கள்? இதெல்லாம் நாங்கள் நம்பிடுவோமா?


LION Bala
மே 04, 2024 20:03

ஜனநாயக முறைப்படி தான் தேர்தல் நடக்கிறதா அல்லது வலிமை மிக்கவன் வெற்றி பெற்றதாக அர்த்தமா?


Godfather_Senior
மே 04, 2024 19:49

அப்போ பொது மக்கள் கிட்டே வசூல் செஞ்ச பணத்தை திருப்பி தருவீர்களா ? அப்படி செஞ்சா நீங்க யோக்கியமானவர்தான்


ramesh
மே 04, 2024 18:13

பிஜேபி மிரட்டல் மற்றும் பணத்தால் வீழ்த்த பட்ட மூன்றாவது விக்கெட் என்பதே சரி


Duruvesan
மே 04, 2024 19:36

சரிங்க மூர்க்ஸ், தேர்தல் பத்திரம் மூலம் காங்கிரஸ் வாங்கிய பணம் ஸ்வாகா ?


Suppan
மே 04, 2024 20:44

ஒடிஷாவில் பிஜு ஜனதா தல்தான் பிரதான கட்சி அந்தத்தொகுதியில் பி ஜ த, பாஜக இரண்டுமே களத்தில் தில் உள்ளன


Rajagiri Apparswamy
மே 04, 2024 18:12

தேர்தல் பத்திரம் மூலம் காங்கிரஸ் வசூல் செய்த நிதி எங்கே போனது இதிலும் விழா ?


ramesh
மே 04, 2024 18:12

நடப்பதை பார்த்தால் ஜனநாயக தேர்தல் போல தெரிய வில்லை பணம் மற்றும் மிரட்டல் மூலமாக எதிர்க்கட்சி வேட்பாளர்களை போட்டியில் இருந்து விலக செய்வது அப்பட்டமாக தெரிகிறது இதற்கு தேர்தலே தேவை இல்லை பிஜேபி ஏ ஆட்சியில் தொடர்ந்து இருந்து கொள்ளலாமே எதற்கு இந்த தேர்தல் நாடகம்


Duruvesan
மே 04, 2024 19:35

விடியல் தோத்தா தான் இப்படி எல்லாம் சொல்லும் உபிஸ், இப்பவே sangu?


வாய்மையே வெல்லும்
மே 04, 2024 17:54

நேரு மாமா வீட்டில் கதவு தட்டி இருந்தால் உங்களுக்கு கனகாபிஷேகம் நடந்திருக்குமே அம்புட்டு செல்வங்களும் ஒரே இடத்தில மையம் கொண்டுள்ளது வயநாடு அரசர் வீட்டில் அவர் அறிவித்து உள்ள சொத்து மதிப்பு வெறும் இருவது கோடி மட்டுமே பரம ஏழை ஆசாமி ஹா ஹா ஹா


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி