உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 மாத கர்ப்பிணி மாயம் போலீசில் கணவர் புகார்

4 மாத கர்ப்பிணி மாயம் போலீசில் கணவர் புகார்

பெங்களூரு: பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற, நான்கு மாத கர்ப்பிணி திடீரென மாயமாகி உள்ளார். அவரை பஸ் நிலையங்களில் குடும்பத்தினர் தேடிவருகின்றனர்.பெங்களூரு தாவரகெரேயில் வசிப்பவர் சாமி, 34. இவரது மனைவி ஷாலினி, 30. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார். ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு, கடைக்கு சென்று பால் வாங்கி வருவதாக, கணவரிடம் கூறிவிட்டு, வீட்டில் இருந்து ஷாலினி புறப்பட்டு சென்றார். ஆனால் 8:00 மணி ஆகியும் திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த சாமி, மனைவியின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.ஆனால், ஷாலினி மொபைல் போனை வீட்டில் விட்டு சென்றது தெரிந்தது. பல இடங்களில் மனைவியை தேடிய கணவர், கடைசியாக தாவரகெரே பஸ் நிலையம் சென்று தேடினார். பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருக்கும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மெஜஸ்டிக் செல்லும் பி.எம்.டி.சி., பஸ்சில், ஷாலினி ஏறி சென்றது தெரிந்தது.இதனால் சாமி, மெஜஸ்டிக் பஸ் நிலையம் வந்தார். பஸ் நிலையம் முழுதும் தேடியும், ஷாலினி கிடைக்கவில்லை. அவரது புகைப்படத்தை காட்டி, அங்கு உள்ளவர்களிடம் கண்ணீருடன் விசாரித்தார். ஆனால் யாரும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர்.கே.ஆர்.மார்க்கெட், சாட்டிலைட் பஸ் நிலையத்திலும் ஷாலினியை, குடும்பத்தினர் தேடிவருகின்றனர். ஆனால் அவர் எங்கு உள்ளார். அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. ஷாலினியை கண்டுபிடித்து தரும்படி, தாவரகெரே போலீசில், சாமி புகார் அளித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை