மேலும் செய்திகள்
அரசு மருத்துவ கல்லுாரியில் வைரவிழா கொண்டாட்டம்
16-Nov-2025
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான மருத்துவக் கல்லுாரியில், மொத்தமுள்ள 50 எம்.பி.பி.எஸ்., சீட்களில், 42 இடங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ரியாசி மாவட்டத்தில், வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரி உள்ளது. வரும் 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான, 50 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான சேர்க்கை விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதன்படி, மொத்தமுள்ள 50 இடங்களில், 42 இடங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப் பட்டன; ஏழு இடங்கள் ஹிந்து மாணவர்களுக்கும், ஒரு இடம் சீக்கிய மாணவருக்கும் வழங்கப்பட்டன. வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவக் கல்லுாரியில், ஹிந்து மாணவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் எனக்கூறி, கடந்த வாரத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், தகுதி அடிப்படையிலேயே சேர்க்கை நடந்தது என, விளக்கம் அளித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த ஜம்மு - காஷ்மீர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுனில் சர்மா தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள், துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லுாரி சேர்க்கை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தி உள்ளனர்.
16-Nov-2025