உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் பலி

பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் பலி

திருவனந்தபுரம்: அளவுக்கு அதிகமாக மிஞ்சிபோன பரோட்டாவை சாப்பிட்ட 5 மாடுகள் பலியானது. கேரளாவில் நடந்த இந்த துயர சம்பவம் விவரம் வருமாறு: கொல்லம் அருகே வட்டப்பாரா என்ற பகுதியை சேர்ந்த விவசாயி ஹசபுல்லா. இவர் மாட்டுப்பண்ணை நடத்தி வருவதுடன், பால் விநியோகமும் செய்து வருகிறார். வழக்கத்திற்கு மாறாக ஓட்டல்களில் மிஞ்சிய பரோட்டாவை வாங்கி மாடுகளுக்கு உணவாக வழங்கியுள்ளார். சாப்பிட்ட சில மணி நேரத்தில் 5 மாடுகளும் திடீரென இறந்தன. இது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார். மாடுகளை பரிசோதித்ததில் உணவு ஜீரணம் ஆகாமல், வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதால் மாடுகள் இறந்தது தெரிய வந்தது.

விவசாயிக்கு நிவாரணம்

கால்நடை துறை அமைச்சர் சிஞ்சுராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகம் பரோட்டோ, பலாப்பழம், சோறு ஆகியவற்றை மாடுகளுக்கு வழங்க வேண்டாம் என டாக்டர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 17, 2024 19:14

அந்நிய மதம் என்றல் தாஜா செய்வதற்கு இந்த திருட்டு கான் காங்கிரஸ், தயங்குவதேயில்லை. எவனோ ஒருவன் கொழுப்பெடுத்து புரோட்டாவை மாட்டிற்கு போட்டால் அதற்க்கு அரசு ஏன் காசு கொடுக்கணும், அவன் ஒரு பால் வியாபாரி. பொது தொண்டு செய்பவன்ல்லை.


என்றும் இந்தியன்
ஜூன் 17, 2024 18:01

வடநாட்டு பரோட்டா கோதுமை மாவில் செய்வது.... நம்மூர் புரோட்டா இது பரோட்டா அல்ல மைதா மாவில் செய்வது


என்றும் இந்தியன்
ஜூன் 17, 2024 17:57

பரோட்டாவை சாப்பிட்ட 5 மாடுகள் பலியானது கேரளாவில். ஆகவே யாரும் பரோட்டா சாப்பிடாதீர்கள் கேரளாவில் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றது என்று கொள்ளலாமா கேரளா முதல்வரே


ஆரூர் ரங்
ஜூன் 17, 2024 14:36

பரோட்டா உடல்நலத்துக்குக் கெடுதலா என்பதை மாட்டுக்கு கொடுத்தா பரிசோதிக்க வேண்டும்?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 18, 2024 12:18

மாடுகளை உண்ணவேண்டும் ...... இது ஒரு சாக்கு ........


Tiruchanur
ஜூன் 17, 2024 14:05

பரோட்டா உடம்புக்கு நல்லதல்ல. எவ்வளவோ சொல்லியும் மக்கள் கேட்பதில்லை. அதேபோல் பிரியாணியும் மாதத்திற்கு 2 முறை சாப்பிட்டாலே அதிகமானது. அதை தினமும் தின்பவர் எக்கச்சக்கம் ஆகிவிட்டனர். இது நல்லதல்ல


kumar c
ஜூன் 17, 2024 12:50

வருந்தத்தக்க செய்தி


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 17, 2024 12:40

கேரளா கம்மிகள் ஆட்சி.அதாவது தீம்கா கூட்டணி. இங்க கள்ள சாராயத்துக்கு பத்து லட்சம். அங்க புரோட்டாவுக்கு பல லட்சம் .


ram
ஜூன் 17, 2024 12:17

ஓட்டுக்காக இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையினர் என்றால் எதுவேணாலும் செய்வார்கள்.


Thiru Moorthi S
ஜூன் 17, 2024 12:06

ஆமணக்கு மரவள்ளி குச்சிகிழங்கு இழை தண்டு மாவு இதில் எதை உண்டாளும் 30 நிமிடத்தில் மாடு ஆடு கதை முடிந்துவிடும்..


அருண், சென்னை
ஜூன் 17, 2024 12:02

நன்கு கவனியுங்கள்..


மேலும் செய்திகள்