உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; ஆல் பகுதியில் இருந்து வேன் ஒன்று அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தோடா நகர பகுதிக்குச் சென்ற அந்த வாகனத்தில் 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். தோடா மாவட்டத்தில் பாரத்-பாக்லா சாலையில் வேன் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்தது. வந்த வேகத்தில் வேன் பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களில் 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை அங்குள்ளோரும், மீட்புக்குழுவினரும் மீட்பு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதிவேகமும், டிரைவரின் கவனக்குறைவும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை