உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் விதிமீறல் 504 வழக்குகள்

தேர்தல் விதிமீறல் 504 வழக்குகள்

தில்ஷாத் கார்டன்:கடந்த 22ம் தேதி வரை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 504 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளந.கடந்த 7ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 22ம் தேதி வரை 504 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் மொத்தம் 17,879 பேர் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் 270 சட்டவிரோத துப்பாக்கிகள், 372 தோட்டாக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 44,265 லிட்டர் மதுபானம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 110.53 கிலோ போதைப்பொருள், 1,200க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.தவிர உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4.56 கோடி ரூபாய் ரொக்கம், 37.39 கிலோ வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ