போதையில் வாகனம் 513 வழக்குகள் பதிவு
பெங்களூரு: ஆங்கில புத்தாண்டையொட்டி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுக்கூடாது என்று நகர போலீசார் எச்சரித்திருந்தனர். ஆயினும், பலரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய, நேற்று தெரியவந்தது.நகர் முழுதும் நேற்று அதிகாலை முதலே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 28,127க்கும் மேற்பட்ட வாகனங்களை, போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர்.இதில், 513 வாகன ஓட்டிகள், அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவே கடந்தாண்டு, 7,620 வாகனங்கள் சோதனையிட்டு, 330 பேர் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஆங்கில புத்தாண்டு அதிகாலை குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக, 513 வழக்குகள் பதிவாகி உள்ளன.