உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூதாடிய 6 பேர் கைது ரூ.87 லட்சம் பறிமுதல்

சூதாடிய 6 பேர் கைது ரூ.87 லட்சம் பறிமுதல்

பெங்களூரு, : சூதாட்டம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆறு பேரை கைது செய்து, 86.87 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.பெங்களூரின், சிர்சி சதுக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீடு ஒன்றில், பணத்தை பந்தயமாக வைத்து, சூதாட்டம் நடப்பதாக ஜே.ஜே., நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை அடுக்குமாடி வீட்டில் சென்று சோதனை நடத்தினர்.சூதாட்டம் நடத்திய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டம் நடத்த பயன்படுத்திய உபகரணங்கள், 1,48,300 ரூபாய் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், 85.39 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஆவணங்கள் இல்லாததால், இந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.வீட்டின் உரிமையாளர், தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஜே.ஜே., நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை