உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 துப்பாக்கிகள் பறிமுதல் இரு ரவுடிகள் சிக்கினர்

6 துப்பாக்கிகள் பறிமுதல் இரு ரவுடிகள் சிக்கினர்

சண்டிகர்:தாதா பாம்பிஹா கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: குண்டர் தடுப்புப் படை மற்றும் பர்னாலா போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், தாதா பாம்பிஹா கும்பலைச் சேர்ந்த சந்தீப் சிங் மற்றும் சேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில், சிலரை சுட்டுக் கொல்ல பாம்பிஹா கும்பலைச் சேர்ந்த ரவுடிகளுக்கு இந்தத் துப்பாக்கிகளை வழங்க இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற கூட்டாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 13, 2025 12:22

முதலில் இந்த கள்ள கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எங்கிருந்து வருகின்றன, யார், எங்கே தயார் செய்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த கள்ள துப்பாக்கி தயாரிக்கும் தொழிசாலைகளை மூடுங்கள் அல்லது அழித்து நிர்மூலமாக்குங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை