உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவில் 6 பேர் உயிருடன் மீட்பு: பினராயி பாராட்டு

வயநாடு நிலச்சரிவில் 6 பேர் உயிருடன் மீட்பு: பினராயி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் இரு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தில் வனத்துறையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 295 பேர் பலியாகினர். பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வயநாடு பகுதியில் வீட்டில் 4 நாட்கள் கழித்து பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை 6 வயது குழந்தை என இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதே போன்று இரு ஆண், இரு பெண் ஆகிய மேலும் 4 நான்கு பேர் என 6 பேர் மீட்கப்பட்டனர்.இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது ‛ எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியது. நமது வனத்துறையினர் 8 மணி நேரம் அயராது செயல்பட்டு விலை மதிப்பில்லாத 6 உயிர்களை மீட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டு. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஆக 03, 2024 06:17

இத்தனை உயிர்களை பலி வாங்கியது கம்முனிச அரசின் மெத்தனம் என்றால் அது மிகையாகாது. ஆகவே தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவது நல்லது.


Sundar
ஆக 02, 2024 23:26

இதில் அரசியலோ, பாகுபாடோ கூடாது.


Ramesh Sargam
ஆக 02, 2024 22:42

தங்கள் உயிரை துச்சமாக நினைத்து இரவும் பகலும் மீட்புப்பணியில் இருக்கும் ராணுவத்தினரை பாராட்ட மறந்துவிட்டார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை