உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் 6 வயது சிறுமி கொலை; பாலியல் சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

குஜராத்தில் 6 வயது சிறுமி கொலை; பாலியல் சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் தோஹத் மாவட்டம் பிபலியா ஆரம்பப்பள்ளியில் 1ம் வகுப்பு மாணவியை துன்புறுத்தி கொலை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ராஜ்தீப் சிங் ஜாலா கூறுகையில், ''6 வயது பள்ளி மாணவியின் உடல் கடந்த வியாழன் அன்று, மாலையில் பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், 10 பேர் கொண்டு குழு அமைத்து கொலைக்கான ஆதாரத்தை திரட்டினர்,'' என்றார்.மாணவியின் தாய் கூறுகையில், ''எனது மகளை, தலைமை ஆசிரியர் கோவிந்த நத், தினமும் காரில் அழைத்து செல்வார். அன்று காலையில் 10.20 மணிக்கு அவர், எனது மகளை வீட்டிலிருந்து அழைந்து செல்ல வந்தார். நான் அவளை காருக்கு அழைத்து சென்று ஏற்றிவிட்டேன் . ஆனால், எனது மகள் பள்ளிக்கு சென்றடையவில்லை. இதை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.''பள்ளிக்கு அழைத்து சென்ற தலைமையாசிரியர், வழியில் எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனால் அந்த சிறுமி, எதிர்ப்பு தெரிவித்து அடித்துள்ளாள். அதில் அதிர்ந்த போன அந்த தலைமையாசிரியர் அடிப்பதை நிறுத்த முயற்சித்துள்ளார்.''மாலை 5 மணிக்கு பள்ளிக்கு வரும் போது, காரிலேயே அந்த சிறுமியை கொலை செய்துவிட்டு உடலை பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டார். அவளுடைய புத்தக பை மற்றும் ஷூக்கள் வகுப்பறைக்கு வெளியே கிடந்தது. முதலில் மறுத்த அவர், நாங்கள் துருவி, துருவி கேள்வி கேட்ட போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்,'' என்று கண்ணீர் மல்க கூறினார்.கல்வித்துறை அமைச்சர் குபேர் தின்டோர் கூறியதாவது: இது மாதிரி சம்பவங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. இச்சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. விரைவில் விசாரணை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தோம். 3 நாட்களில் குற்றவாளியை கண்டுபிடித்து, தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதிரியான சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இது போன்ற குற்றச்சம்பவங்கள், திரும்பவும் நடைபெறக்கூடாது. அதற்கான தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Velan Iyengaar
செப் 26, 2024 05:49

மிக நீண்ட ராமராஜ்யம் ....


Azar Mufeen
செப் 24, 2024 23:27

இந்த நாயை கழுத்து மட்டும் தெரியுமளவுக்கு புதைத்து விட்டு தலையில் சர்க்கரைபாகை உற்றி கட்டெறும்பை விட்டுஉயிர் போகும் வரை கடிக்க செய்ய வேண்டும்.


Anonymous
செப் 24, 2024 22:38

இப்படிபட்ட கயவர்கள்களை முகத்தை எல்லோரும் பார்க்கும் படி , போட வேண்டும், அப்போது தான் அவர்களுக்கும் பயம் இருக்கும் ,மக்களும் இப்படிபட்ட கொடூரர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்


Vijay D Ratnam
செப் 24, 2024 22:27

ஆறு வயது குழந்தையை பாலியல் சித்ரவதை செய்து கொன்றது எவனோ தெருப்பொறுக்கி அல்ல. குடிகார நாய் கிடையாது, கஞ்சா குடிக்கி கிடையாது, மனநலம் குன்றியவன் கிடையாது. இந்தக்கொடூரத்தை செய்து இருப்பது பள்ளியின் தலைமை ஆசிரியர். அறிவை போதிக்கும் ஆசிரியப்பணி செய்யும் நபர். தண்டனை கொடூரமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை பள்ளிக்கூடம் பாதுகாப்பான இடம், பள்ளிக்கு ஆசிரியர்களை நம்பித்தானே அனுப்புகிறோம். மாதா, பிதா, குரு பிறகுதான் தெய்வம் என்று சொல்கிறோம். இந்த தலைமை ஆசிரியருக்கு கொடுக்கும் தண்டனை ஒவ்வொரு பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். அதற்காக மரண தண்டனை கொடுக்க கூடாது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையில் இந்தியாவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுனரை கொண்டு அந்தாளின் இரண்டு கால்களையும் தொடையோடு அகற்றிவிட்டு, இரண்டு கைகளையும் தோளோடு அகற்றிவிட்டு அகற்றிவிட்டு உயிரோடு நடுத்தெருவில் விட்டு வைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு குஜராத் அரசு கல்வித்துறை சார்பாக ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கவேண்டும். அந்த தலைமை ஆசிரியர் குடும்பம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு இரண்டு கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு இடவேண்டும்.


அப்பாவி
செப் 24, 2024 22:26

பா.ஜ ஆட்சி வந்ததும் ஜார்க்கண்டில்.பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்னு சிவராஜ் சவுகான் உறுதி.


Sivakumar
செப் 24, 2024 20:54

குஜராத்தோ, தமிழ்நாடோ , பிஜேபி ஆண்டாலும் சரி, திமுக, அதிமுக ஆண்டாலும் சரி , ஒரு சில காமக்கொடூரங்களும், ரௌடிகளும், திருடர்களும், மொள்ளமாரிகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர் தென்படும்போதுதெல்லாம் அந்த ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் குறைகூறுவதை தவிற்கும் அளவுக்காவது நமக்கு முதிர்ச்சி இருக்கவேண்டும்.


Ramesh Sargam
செப் 24, 2024 20:29

இதியாவில் பாலியல் வன்கொடுமை, பாலியல் சித்திரவதை நடக்காத நாட்களே இல்லை. ஏன் இப்படி இந்த குற்றங்கள் தொடர்ந்து நடக்கிறது? ஏன் என்றால், அது சம்பந்தப்பட்ட வழக்குகள் மிக மிக தாமதமாக மந்தகதியில் நடக்கிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படுவதில்லை. நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மிக மிக கடுமையான தண்டனையை குற்றவாளிகளுக்கு கொடுக்கவேண்டும். இல்லையென்றால் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.


தமிழ்வேள்
செப் 24, 2024 20:18

இவனை மாதிரி ஆட்களுக்கு குப்தர் கால தண்டனை முறைதான் ஒத்து வரும்... அவனது உடலுறுப்பை வெட்டி அவன் கையில் ஏந்த வைத்து செத்து விழும் வரை அடித்து கொண்டு ஊரைச் சுற்றி வர செய்தல்..கீழே விழும் போது அடித்து எழுப்பி மீண்டும் நடக்க விடவேண்டும்.பிறகு எவனும் பாலியல் அத்துமீறல் பற்றி நினைக்க கூட மாட்டான்.. அல்லது உயிரோடு முதலைகளுக்கு இரையாக்கி நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்....


பாமரன்
செப் 24, 2024 22:28

ப்ராப்பர் பகோடாஸ் திங்கிங் தமிழ்வேள்... எப்பதான் நார்மல் ஆவீர்கள்...


J.Isaac
செப் 24, 2024 19:58

குற்றவாளி முகத்தை மூடக்கூடாது


Ganesun Iyer
செப் 24, 2024 19:50

ஆமா, ஆமா தண்ணி தொட்டில கக்கா கழிச்ச ஆளுகள 2டே நாள்ள கைது செஞ்சி தண்டனை வாங்கி குடுத்து பாளையங்கோட்டை சிறையில தறில மூளைவாலயத்துக்காக கலர் துண்டு நெஞ்சிட்டிருக்காக.. மீச வெச்சவரு கூட பரிசு வாங்கி பாராட்டியிருக்காரு.


J.Isaac
செப் 24, 2024 23:07

உனக்கு மனிதநேயம் இருந்தால் இப்படி ஒப்பிட்டு எழுதமாட்டாய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை