உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்

சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துபாயில் கைதான 'மகாதேவ்' ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனர்களில் ஒருவரான ரவி உப்பால் என்பவர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோர் ' மகாதேவ்' என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலியை துவக்கி நடத்தி வந்தனர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாய் நகருக்கு இவரும் 2019 ல் சென்றனர். அங்கிருந்தபடி மகாதேவ் செயலியை அவர்கள் இயக்கி வந்தனர். இந்த சூதாட்ட செயலியை நம்பி விளையாடிய லட்சக்கணக்கானோர் பல கோடி ரூபாய் பணத்தை இழந்தனர். இதனால், சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோருக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த விவகாரத்தில் சத்தீஸ்கர் அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சத்தீஸ்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இருவரையும் கடந்த 2023ம் ஆண்டு இருவரையும் துபாய் போலீசார் பிடித்து வைத்து நம்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நம் நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தலின்படி இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு இடையே சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் எனப்படும் தேடப்படும் குற்றவாளி என்பதற்கான நோட்டீசை பிறப்பிக்கும்படி, 'இன்டர்போல் ' எனப்படும் சர்வதேச போலீசுக்கு அமலாக்கத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதன்படி இருவருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முறைப்படி இருவரையும் துபாய் போலீசார் கைது செய்து தகவல் அளித்தனர்.பின்னர் இருவரையும் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் நம் நாட்டு அதிகாரிகள் இறங்கினர். இதற்கு இடையில் ரவி உப்பால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.இந்நிலையில் ரவி உப்பால் ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து வெளியேறிவிட்டார் எனவும், எங்கு சென்றுள்ளார் என தெரியவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரை நாடு கடத்துவதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.முறையான ஆவணங்களை அமலாக்கத்துறை அளிக்காததே, ரவி உப்பலை நாடு கடத்துவதற்கு ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அனுமதிக்கவில்லை என ஒரு தகவல் உள்ளது. ஆனால், இதனை மறுத்த அமலாக்கத்துறை உரிய நேரத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.RAMACHANDRAN
நவ 05, 2025 13:00

குற்றவாளிகளை தப்பிக்க விடுவதில் நம் நாட்டில் செயல்படும் அனைத்து அமைப்புகளும் வல்லமையாக உள்ளன.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 04:41

ரவி உப்பால் துபாய் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அப்போது அவர் தப்பித்து மாயமாகி விட்டாராம். மோடிஜியின் கருணையோ கருணை.


Kalyanaraman
நவ 04, 2025 21:15

நம் நாட்டில் பல நிதி நிறுவனங்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களிடம் பல ஆயிரம் கோடி பணத்தை ஏமாற்றி விட்டார்கள். சம்பந்தப்பட்ட வழக்குகள் 30 வருடங்களை கடந்தும் எந்த விடிவும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்க வில்லை. இதுதான் நமது சட்டம் & நீதிமன்றங்களின் லட்சணம்.


அப்பாவி
நவ 04, 2025 19:20

அடைக்க வேண்டியத அடைச்சு, தொடைக்க வேண்டியதை தொடைச்சா கிடைக்க வேண்டியது கிடைக்காம போகுமா?


D Natarajan
நவ 04, 2025 18:48

பணம் பாதாளம் வரை பாயும். அங்கேயும் லஞ்சம் விளையாடிவிட்டது.


Haja Kuthubdeen
நவ 04, 2025 18:22

துபாய் காவல்துறையின் கட்டுப்பாட்டில் அவன் அடைக்கப்பட்டு இருந்தால் அவன் தப்பியே இருக்க முடியாது.நம் மேதாவிகள் பொறுப்பெடுத்துக் கொண்டு தப்பிக்க விட்டுள்ளார்கள்.இனி அம்புட்டுதான்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 04:44

வாஷிங் மெசின் மட்டும் இல்லை, வேனிஷிங் கிரீம் கூட நம்ம ஜீ தயாரிக்கிறார். உபயோகித்து பலனடையுங்கள்.


Raj
நவ 04, 2025 17:49

போனவன் போயாச்சு இனி எங்கப்போய் பிடிக்க அவ்வளவு தான். கோவிந்தா


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 04:42

குஜராத் பாஜக அலுவலகத்தில் தேடுங்க. கிடைப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை