உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10, பிளஸ் 2 பொது தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி

10, பிளஸ் 2 பொது தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி

புதுடில்லி : 'கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் நாடு முழுதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்' என, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ.,யில் படித்த மாணவர்களை விட மாநில கல்வி வாரிய மாணவர்களே அதிகளவு தோல்வியை தழுவியது தெரியவந்துள்ளது.கடந்த, 2023 - 24 கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் பற்றி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுதும் 56 மாநில கல்வி வாரியங்கள், மூன்று தேசிய கல்வி வாரியங்கள் என மொத்தம் 59 பள்ளி வாரியங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2023 - 24 கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தோம். அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வை, மாணவியர் அதிகளவு எழுதியுள்ளனர். ஆனால், தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இது நேர்மாறாக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 33.5 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதில், 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 28 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களின் விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கருதுகிறோம்.இதேபோல், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 32.4 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதில், 5.2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 27.2 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ.,யில் 6 சதவீத பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். ஆனால், மாநில கல்வி வாரியத்தில் 16 சதவீத மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமாகவும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. மாநில அளவில், 10ம் வகுப்பில் மத்திய பிரதேசத்திலும், 12ம் வகுப்பில் உத்தர பிரதேசத்திலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.முந்தைய கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது. எனினும், தேர்ச்சி சதவீதத்தில் மாணவியர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஹரிநாத்
ஆக 22, 2024 10:24

ஃப்யில் ப்டியலில் உ.பி முதலுடமாம். கல்விக்.கூடங்களைக் கட்டாமல் ராமர் கோவிலைக்.கட்டினால் இதுதான்நடக்கும். ஜெய் ஜகன்னாத்.


Dv Nanru
ஆக 22, 2024 09:01

அதற்க்கு தான் நாடுமுழுக்க ஒரே கல்வி கொள்கையும் திட்டமும் வேண்டும் இல்லை என்றால் இது மாதிரி குழப்பம் தான் வரும் ..


அப்புசாமி
ஆக 22, 2024 07:43

இது மாதிரி விஷயங்களில் உ.பி, ம.பி முதலிடம். ஆனா, அவிங்களுக்கு நிதி கொட்டிக்.குடுப்போம். ஃபெயில் ஆனதுக்கு நேருதான் காரணம். அடிச்சு உடுங்க.


Sankar Ramu
ஆக 22, 2024 08:09

பேசாம, பிளஸ் 2 தேர்வை ரத்து செய்திடலாம். -திராவிட மாடல். ?


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:13

மாநிலக்கல்வி நாசமாகி பல காலம் ஆகிவிட்டது. அதை சரி செய்தாலன்றி கல்விக்கு விடிவு கிடையாது. இதில் முத்தாய்ப்பு வைத்தது போல தமிழகத்தில் பல்லாயிரம் பேர் தாய் மொழி பாடத்தில் கூட தேர்வு எழுதாதவர்கள் / தோல்வியடைந்தவர்கள். மனிதனின் நம்பிக்கை தனது தாய் மொழி. அதை அழித்தால் முற்றும் நாசம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை