உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அனந்த்புர் மாவட்டத்தில் திம்மம்பெட்டா அருகே விவசாய கூலி வேலையை முடித்து விட்டு, கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர் சென்ற ஆட்டோ தலகாசிப்பள்ளியை அருகே சென்ற போது, ஆந்திர அரசு பஸ் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில், நிலைகுலைந்து போன ஆட்டோ சுக்குநூறானது. இதில், நாகம்மா, ராமன்ஜினம்மா, பாலபெட்டையா உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புட்லுர் மண்டலில் உள்ள எல்லுட்லா கிராமத்தைச் சேர்ந்த 13 கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் பயணித்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ananth
நவ 24, 2024 08:59

பஸ் மீது ஆட்டோ மோதவில்லையா. அது என்ன எப்போதும் பெரிய வண்டி மீது குறை சொல்வது.


அப்பாவி
நவ 24, 2024 08:10

ஆட்டோல வெறும் ஏழு பேர் தான் போனாங்களா? பத்து பேர் போகலாமே. இன்னும் சீப்பாக பயணிக்கலாமே.


N.Purushothaman
நவ 24, 2024 10:09

திருட்டு திராவிட ஆட்டோல அப்படிதான் செஞ்சிகிட்டு இருக்காங்க ...


Kalyanaraman
நவ 24, 2024 08:04

13 பேர் பயணிக்கும் வகையில் இந்தியாவில் ஆட்டோ இருக்கிறதா? இந்த ஆட்டோ டிரைவரை கைது செய்திருந்தால் வருங்காலத்தில் இது போன்ற அசம்பாவிதம் தொடராமல் இருக்கும்.


நிக்கோல்தாம்சன்
நவ 24, 2024 07:59

பெண்கள் இருந்தா ஹீரோயிசம் காட்டும் ஆட்டோ ட்ரைவர் மீதும் , அது போன்று நடப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் வாளாவிருந்த பொலிஸாரிடமும் நாய்டு அந்த பணத்தினை வசூலிக்க வேண்டும்


Kasimani Baskaran
நவ 24, 2024 07:37

நாய்டு காரு இதற்க்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் - உடன்பிறப்புக்கள்.