மேலும் செய்திகள்
சவுஜன்யா மாமா விட்டலிடம் வனப்பகுதியில் விசாரணை
11-Sep-2025
தட்சிண கன்னடா: தர்மஸ்தலாவின் பங்களாகுட்டா வனப்பகுதியில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள், இரண்டாவது நாளாக நேற்று சோதனை நடத்தினர். இதில், இரண்டு மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள், மரத்தில் தொங்கிய கயிறுகள், சேலைகள் மீட்கப்பட்டன. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், நேற்று முன்தினம் பங்களாகுட்டா வனப்பகுதியில் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஐந்து மண்டை ஓடுகள், ஏராளமான எலும்புகள் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக, சோதனை நடந்தது. இதில், இரண்டு மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் சிக்கின. சிக்கிய மண்டை ஓடுகளை, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, எஸ்.ஐ.டி., ஊழியர்கள் வெளியே எடுத்து வந்தனர். இவை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. வனப்பகுதியில் மரத்தில் தொங்கிய கயிறுகள், சில சேலைகளையும் எடுத்தனர். ஒரு மண்டை ஓட்டின் அருகில் ஆதார் அட்டை ஒன்றும் கிடந்தது. அது, குடகின் விராஜ்பேட் கோணிகொப்பாவை சேர்ந்த அய்யப்பா, 65, என்பவருடையது. இவர், 2017ல் காணாமல் போய் உள்ளார். அய்யப்பாவின் அடையாள அட்டை, எட்டு ஆண்டுகளுக்கு பின், சிக்கி உள்ளது. அவர் இங்கு வந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், சந்தேகம் எழுந்து உள்ளது.
11-Sep-2025