உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான கழிப்பறையில் 79 சவரன் தங்கம் பறிமுதல்

விமான கழிப்பறையில் 79 சவரன் தங்கம் பறிமுதல்

கொச்சி: கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு, ஐக்கிய அரபு எமிரேட்சின் ராஸ் அல்கைமாவில் இருந்து வந்த இண்டிகோ வி மானம் நேற்று அதிகாலை தரையிறங்கியது. பயணியர் கீழே இறங்கியபின், விமான கழிப்பறையை சுத்தம் செய்ய பணியாளர்கள் சென்றனர். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை பார்த்த பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சோதனை நடத்தியதில், அதில் 79 சவரன் தங்கம் இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், தப்பிக்கும் நோக்கில் கழிப்பறையில் தங்கத்தை மறைத்து வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை