உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலுவையா... இழுவையா..: உச்சநீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்குது 83 ஆயிரம் வழக்குகள்

நிலுவையா... இழுவையா..: உச்சநீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்குது 83 ஆயிரம் வழக்குகள்

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது 10 ஆண்டுகளில் அதிகம் எனவும், இக்காலகட்டத்தில் 8 மடங்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்துள்ளது. 2009 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 26 ல் இருந்து 31 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் பிறகு, 2013ம் ஆண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 66 ஆயிரமாக அதிகரித்தது.பிறகு 2014 ம் ஆண்டில் சதாசிவம், ஆர்எம் லோதா ஆகியோர் தலைமை நீதிபதிகளாக இருந்த போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 63 ஆயிரமாகவும் குறைய, அடுத்த ஆண்டு 59 ஆயிரமாக குறைந்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் எச்எல் தத்து.ஆனால், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 63 ஆயிரமாக உயர்ந்தது. பிறகு தலைமை நீதிபதியாக வந்த ஜேஎஸ் கேஹர், வழக்கு நிர்வாக அமைப்பில் தொழில்நுட்பத்தை புகுத்தினார். இதன் காரணமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 56 ஆயிரமாக குறைந்தது. ஆனால், 2018 ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 57 ஆயிரமாக அதிகரித்தது.2019ம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் முயற்சியால், 2019ம் ஆண்டு மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. அதேபோல் வழக்குகளின் எண்ணிக்கையும் 60 ஆயிரமாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கோவிட் காரணமாக நீதித்துறையும் பாதிக்கப்பட்டது. வழக்குகளின் எண்ணிக்கையும் 65 ஆயிரமாக உயர்ந்தது. கோவிட் தாக்கம் நீட்டித்து வந்ததால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டு 70 ஆயிரமாகவும், 2022ம் ஆண்டு 79 ஆயிரமாகவும் அதிகரித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்ததே தவிர குறையவில்லை.இன்றைய நிலையில் 82, 831 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 33 சதவீதம் 27,604 வழக்குகள் ஓராண்டுக்கு முன்பும், 38,995 வழக்குகள் இந்தாண்டும் தொடரப்பட்டவை. அதேநேரத்தில் 37,158 வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது.

உயர்நீதிமன்றங்களில்

உயர்நீதிமன்றங்களில் கடந்த 2014ம் ஆண்டு 41 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதன் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்து கடந்த ஆண்டு 61 லட்சமாகவும், இந்தாண்டு 59 லட்சமாகவும் உள்ளது.

விசாரணை நீதிமன்றங்கள்

விசாரணை நீதிமன்றங்களில் 2014ல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2.6 கோடியாக இருந்தது. தற்போது 4.5 கோடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

lana
ஆக 30, 2024 21:16

உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்க மட்டும்தான் வேலை செய்கிறது


நீதிகுமார்
ஆக 30, 2024 21:07

அங்கே வர்ர ஒவ்வொரு நீதிபதியும் தலைக்கு 500, 1000 வழக்குகள் நிலுவையில் வெச்சுட்டு போயிருவாங்க. எப்போ விடியுமோ?


Kalyanaraman
ஆக 30, 2024 16:45

போலிஸ் - வழக்கறிஞர் - நீதிபதி பல வழக்குகளில் கூட்டு கள.. . .. தகுதி இல்லை என்று தெரிந்தும் வழக்கு போட அனுமதிப்பது. ட்ரயல் கோர்ட்டில் விசாரணையை தாமதப்படுத்துவதில் பல வழக்கறிஞர்களுக்கு முனைவர் பட்டம் கொடுக்கலாம். நீதிமன்ற நடவடிக்கை முறைகள் அதற்கு மேல் - கோர்ட்டுக்கு மட்டும் போயிடக் கூடாது. சொத்து முழுசும் உரிஞ்ச்சு எடுத்துடுவாங்க. பரம்பரை பரம்பரையா கேஸ் நடந்துட்டே இருக்கும். வக்கீல்கள் சம்பாதிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுவும் நீதிபதிக்கு தெரிஞ்ச வக்கீல் ஆக இருந்தால் வழக்கு என்ன மாதிரி வேணாலும் போகும்.


KRISHNAN R
ஆக 30, 2024 15:11

நீதி யோ... எதுவோ..... காசு வேணும்.....காசேதான் கடவுளடா


rsudarsan lic
ஆக 30, 2024 14:58

பாதி அரசியல் வழக்குகள் பாதி அராஜக வக்கில் கைகளில் உள்ள வழக்குகள்


theruvasagan
ஆக 30, 2024 13:28

அரசியல்வாதிகளுக்கு ஜாமீன் கொடுப்பது அதி முக்கியம். அதி அவசியம். அந்த வேலையை ஒதுக்கி வைத்து விட்டு சாமனியர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கவனம் செலுத்துவது நீதி வழங்குவதில் பாரபட்சமாகிவிடும் என்று நினைத்திருப்பார்களோ என்னவோ.


சமூக நல விரும்பி
ஆக 30, 2024 13:18

மாவட்ட நீதி மன்றங்களில் மாதத்தில் 15 நாட்கள் தான் வேலை நடக்கிறது. அப்படி இருக்கும் போது வழக்குகள் தேங்காமல் என்ன செய்யும். அதை பற்றி யாருக்கும் கவலை இல்லை. அவ்வப்போது அறிக்கை விடுவதோடு சரி. அதனால் பாதிக்க படுவது பொது மக்கள் தான். வழக்குகள் முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தீர்ப்பு கிடைக்காமலே இறந்து போகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை