உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 122 பேர் உயிரிழந்தனர்.உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தரா ராவ் நகரில், போலே பாபா சத்சங்கம் என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து மொத்தமாக மக்கள் வெளியேறினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத் இரங்கல்

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய, தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

பார்லிமென்ட்டில் நடைபெற்று வரும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி வரும் மோடி உ.பி.,யில் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியனாவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.மேலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா. ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயம்அடைந்தவர்களுக்கு தலா ரூ.50, ஆயிரம் வழங்கப்படும் என்றார். முன்னதாக உபி. முதல்வர் யோதி ஆதித்யநாத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சம்பவ இடத்தி் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஜனாதிபதி இரங்கல்

உ.பி.,யில் ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கிய பலியானவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக காங்.., தலைவர் ராகுல் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Kanagaraj M
ஜூலை 03, 2024 11:01

படிப்பறிவும் சுயசிந்தனையும் இல்லாததே இதற்குக்காரணம்.


Perumal.R
ஜூலை 03, 2024 08:52

நீங்கள் இறந்தாலும் கடவுள் உங்களுக்கு உதவ மாட்டார்


அப்புசாமி
ஜூலை 03, 2024 00:27

ஜனங்களுக்கு எத்தை தின்னா பித்தம் தெளியும்னு ஆன்மீகம்னு நினைச்சுக்கிட்டு ஆன்மீக வாதிகள் விடும் புருடாக்களை நம்பி போறாங்க. தத்வமசி ங்கற மாதிரி இறைவன் உன் உள்ளே இருக்கான்நு புரிஞ்சிக்கோங்க. ராமரும், கிருஷ்ணரும், சிவனும் எந்தக் கோவிலுக்குப் போனாங்க?


Bala
ஜூலை 06, 2024 07:14

இப்ப திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்னு புருடா விடலையா? அதை நம்பி மக்கள் அடிபட்டு மிதிபட்டு அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு போகவில்லையா? அவர்களுக்கு வோட்டுப்போடவில்லையா? அதுபோல் தான் இதுவும்


TCT
ஜூலை 02, 2024 22:49

Tamil Porolis and DK cadres common. Let us blast the Modi for this. good Chance. DMK please instigate your other binami DMK kaikoolies to bark on Modi


ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 22:40

சில ஜென்மங்களுக்கு சுனாமி காலத்தில் நாட்டில் அதிக இறப்புக்கள் வேளாங்கண்ணியில் என்பதும், மெக்காவில் சமீபத்தில் 600 பேர் இறந்ததும் செய்திகளே அல்ல


kantharvan
ஜூலை 03, 2024 05:31

சரி அப்போ இந்த கடவுளும் உடான்ஸா ..


முருகன்
ஜூலை 02, 2024 22:01

ஆளும் அரசின் தோல்வி உடனாடியாக முதல்வர் பதவி விலக வேண்டும் இப்போ தெரியும் வலி


kantharvan
ஜூலை 03, 2024 05:40

எல் முருகன் பதில் சொல்வாரா..


kantharvan
ஜூலை 02, 2024 21:43

யாஹூ ஹுரே ...பாலிவுட்ல பணம் சம்பாதிக்க அடுத்த ஸ்டோரி ரெடி ..துலுக்கன் செஞ்ச சதி அப்படின்னு திரைக்கதை சீக்கிரமா ரெடி பண்ணுங்க. மாநில அரசின் வரி விலக்கு ..உச்சா நீதி மாண்ட உத்தரவோட கேடி இலவச விமர்சனத்தோடு 200 கோடி கல்லா கட்டலாம்.


rsudarsan lic
ஜூலை 02, 2024 21:43

சரியான ஏற்பாடுகள் இல்லாமை க்காக போலீஸ் மற்றும் கலெக்டர் லெவலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


K.n. Dhasarathan
ஜூலை 02, 2024 21:08

சிறப்பான நீரவாகம், வாழ்த்துக்கள், அநேகமாக தேசிய விருது கிடைக்கலாம், ஆனால் பொய்.ஜே. பி ஆலாத மாநிலம் என்றால் நடக்கிறதே வேரா.


T.sthivinayagam
ஜூலை 02, 2024 20:51

இந்தியாவில் மதுபோதையில் இறந்தவர்களை வட ஆன்மீக போதையில் இறந்தவர்களேஅதிகம் என மக்கள் கூறுகின்றனர்


kantharvan
ஜூலை 02, 2024 21:54

உத்தமமான கருத்து .


kantharvan
ஜூலை 02, 2024 21:57

இந்தியால மட்டுமில்ல உலகத்திலேயும் சமீபத்தில்தான் மெக்காவிலும்... தானே சாவை தேடுபவர்களை யார்தான் தடுக்க முடியும் ..மத போதை தெரியாதவரை தெளியாதவரை இவை தொடர் கதைதான்.


Bala
ஜூலை 02, 2024 22:28

மனிதனுக்கு இறப்பு என்பது நிச்சயம். அது அவனுடைய ஆன்மிகம் ஆன்ம லாபத்தை தேடிச்செல்லும்போது நிகழ்வது யாருக்கும் பாதிப்பில்லை அவர்கள் குடும்பத்தை தவிர. ஆனால் மது போதை இறப்பு என்பது இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடுகிறது. ஆன்மிகம் கோடிக்கணக்கான பேருக்கு மன நிம்மதியை தந்திருக்கிறது. மது போதை தன் குடியை கெடுத்து வருங்கால சந்ததியரின் குடியை கெடுத்தது மட்டுமே செய்திருக்கிறது. போதை என்று சொன்னால் புகழும் ஒரு போதைதான், பணத்தாசையும் ஒரு போதைதான், காதல் என்பதும் ஒரு போதைதான், பதவி என்பதும் ஒரு போதைதான். சிலபேரால் பதவி இல்லாமல் வாழ்க்கையை ஓட்டமுடியாது. அதிகாரமும் ஒரு போதைதான் . ஏன் சமுதாய தொண்டுகூட ஒரு போதைதான். போதை இருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு தவறான வழிகாட்டிகளா இல்லையா என்பதுதான் முக்கியம். கூட்ட நெரிசல் என்பது ஆன்மீக பிரச்சனை அல்ல. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவன குறைவு, நிர்வாக குறைவு, சரியான திட்டமிடல் இல்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை