| ADDED : நவ 15, 2025 12:14 PM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிப்பொருட்கள் வெடித்து நிகழ்ந்த சம்பவம் தற்செயலானது. பயங்கரவாத தாக்குதல் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரசாந்த் லோகண்டே நிருபர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு பதுக்கி வைத்து இருந்த வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்களின் ஒரு பெரிய குவியல் மீட்கப்பட்டு, ஸ்ரீநகரின் புறநகரில் அமைந்துள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமான தற்செயலாக வெடிப்பொருட்கள் வெடித்த சிதறியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து வேறு எந்த ஊகங்களும் தேவையற்றவை. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், அருகில் உள்ள சில கட்டடங்களும் சேதம் அடைந்து இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.பெரும் சேதம்
ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் கூறியதாவது: ஜம்முகாஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது வெடிவிபத்து தற்செயலானது. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து எந்த ஊகங்களும் தேவையற்றது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷன் பெரும் சேதம் அடைந்துள்ளது. அருகில் உள்ள கட்டடங்களும் சேதம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.