உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புலனாய்வுத் துறையில் 9,500 பணியிடங்கள் காலி

புலனாய்வுத் துறையில் 9,500 பணியிடங்கள் காலி

புதுடில்லி: 'புலனாய்வுத் துறையில், 9,500 பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், லோக்சபாவில் கூறுகையில், 'புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாகவும், ஆட்களை தேர்வு செய்வது தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாகவும், புலனாய்வுத் துறையில், 9,443 பணியிடங்கள் காலியாக உள்ளன. 'பணியிடங்களை நிரப்புவதற்காக, நேரடித் தேர்வு, வளாகத் தேர்வு, ஒப்பந்த அடிப்படையிலான தேர்வு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகள், உள்துறை அமைச்சர் மற்றம் உள்துறை செயலர் அளவில், கண்காணிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை