மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
புதுடில்லி'வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் 96.88 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்' என தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது. அதன்படி, புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க நாடு முழுதும் 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த முறை, 6 சதவீத வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த ஆண்டு, 2.63 கோடி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், 1.22 கோடி பேர் ஆண்கள்; 1.41 கோடி பேர் பெண்கள். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 15 சதவீதம் அதிகமாக உள்ளனர். மொத்த வாக்காளர்களில், 88.35 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள். 1.65 கோடி பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, பாலின விகிதம் 940 லிருந்து 948 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 15.30 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2