உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிச்சைக்காரர் கையில் ரூ.1.44 லட்சம் ஐபோன்!

பிச்சைக்காரர் கையில் ரூ.1.44 லட்சம் ஐபோன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், சாலையோரம் பிச்சை எடுக்கும் நபர், 1.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன்' பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடக பயனாளர், ரோஹித் இன்பார்ம்ஸ் என்பவர், தன் சமூக ஊடக பக்கத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்தார். அதில், சாலையோரம் பிச்சை எடுக்கும் நபர் கையில், 'ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன்' வைத்தபடி பிச்சை எடுக்கும் காட்சி இடம் பெற்று இருந்தது.'ஆப்பிள்' நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த மாடல் போன், 1.44 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் நபர், இந்த விலை உயர்ந்த போன் பயன்படுத்துவதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த காட்சி, ராஜஸ்தானின் அஜ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், பிச்சை எடுக்கும் நபரிடம், 'இவ்வளவு விலை உயர்ந்த போன் வாங்க பணம் எப்படி கிடைத்தது?' என கேட்கப்படுகிறது.அதற்கு, 'பிச்சை எடுத்து அதில் சேர்ந்த பணத்தில் தான் வாங்கினேன். மாத தவணை அல்ல, மொத்த பணத்தையும் கொடுத்து தான் வாங்கினேன்' என, அவர் பதில் அளிக்கிறார்.இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவலான விவாதத்தை உருவாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜன 21, 2025 08:37

ஜீ போட்ட 15 லட்சத்தில் நானே ஐ போன் வாங்கினேன்.


Arunkumar,Ramnad
ஜன 21, 2025 09:21

உனக்குத்தான் உழைத்து பிழைக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லையே பேசாமல் நீயும் அவன் போல.....


Kasimani Baskaran
ஜன 21, 2025 07:37

இதைவைத்து அறிவாலய வாசலில் பிச்சை எடுக்கும் கோஷ்டி 300 ஓவாவுக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு ஐபோன் என்று கேட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:44

வட்டிக்கு பணம் விட்டிருப்பானோ ?


venugopal s
ஜன 21, 2025 05:50

அண்ணாமலை தலைமையில் பாஜக விடம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை கொடுத்தது போல் உள்ளது!


நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:39

ஒகே "சார்" உங்க சாரை கண்டுபிடுச்சுடீங்களா சார்


J.V. Iyer
ஜன 21, 2025 04:33

இதை நாங்க நம்பனும் ஏன்னா எங்க காதுல பூ சுத்தி இருக்கு.


Mediagoons
ஜன 21, 2025 02:35

மோடியின் டிரில்லியன் டாலர் அரசு இவரிடம் பிச்சையெடுத்து தன பிபாவங்களை கலைந்துகொள்ளலாம்


தாமரை மலர்கிறது
ஜன 21, 2025 02:21

இந்தியாவின் பொருளாதார பலத்தை உலகிற்கு விளக்குகிறது இந்த செய்தி. பிஜேபி ஆட்சியில் இந்தியா வரலாறு காணாத வளர்ச்சி அடைந்துவருகிறது. அடுத்து வைக்கும் அடி அமெரிக்காவின் தலையில் தான் என்று அமெரிக்காவே அச்சப்படுகிறது.


சமீபத்திய செய்தி