உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தலைவராக 3 ஆண்டு நிறைவு செய்யும் கார்கேவுக்கு சவால்! மாநிலங்களில் பலமிழக்கும் கட்சியை மீட்டெடுப்பாரா?

காங்., தலைவராக 3 ஆண்டு நிறைவு செய்யும் கார்கேவுக்கு சவால்! மாநிலங்களில் பலமிழக்கும் கட்சியை மீட்டெடுப்பாரா?

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்று மூன்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். மாநிலங்களில் பலமிழக்கும் அக்கட்சி, இவரது தலைமையின் கீழ் மீண்டும் உயிர் பெறுமா? காங்., தலைவராக கார்கே பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ., அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது, இதில் மிக முக்கியமானது. காங்., சட்டவிதிகளில், 2010-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால், அக்கட் சி தலைவர் பதவி ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப் பட்டது. இதன்படி, 83 வயதான கார்கே, இன்னும் இரண்டு ஆண்டுகள் தலைவராக தொடர்வார். கட்சியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கார்கேவுக்கு சில வெற்றிகளும், அதிக தோ ல்விகளும் கிடைத்துள்ளன.

99 இடங்கள்

கடந்த, 2022, அக்., 2 6ல் காங்.,கின் தலைவராக கார்கே பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ், 2024 லோக்சபா தேர்தலில், 99 இடங்களை காங்., கைப்பற்றியதுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. இது, கார்கேவுக்கு கிடை த்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதே போல், 2024ல் லோக்சபா தேர்தலில் காங்., தலை மையில், 'இண்டி' கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் கார்கே. கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருந்த பிளவுகளை நீக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தியதில் இ வரது பங்கு அளப்பரியது. இதைத்தொடர்ந்து, காங்.,கின் அடிமட்டத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை கார்கே தீவிரப் படுத்தியுள்ளார். இதன்படி, பூத் மற்றும் மண்டல அளவிலான குழுக்களை அமைத்து, புதிய தலைவ ர்களை நியமிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதுவரை குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் புதிதாக, 144 மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட், ஒடிஷா, உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நடைமுறை முடிவடைந்துள்ளது. தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானாவில் இந்நடைமுறை துவங்கியுள்ளது. இதன் வாயிலாக காங்.,கிற்கு புத்துயிர் கிடைக்கும் என கார்கே நம்புகிறார்.

விமர்சனம்

கார்கே, தன் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தினாலும், நேரு குடும்பத்தின் நிழலில் அவர் இருப்பதாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். எனினும், காங்., மூத்த தலைவர்கள் மட்டுமின்றி, 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களிடமும் கார்கே, நன்மதிப்பை பெற்றுள்ளார். இதேபோல், சில சமயங்களில் கார்கே, நேரு குடும்பத்தின் அதிருப்திக்கு ஆளாகாமல், தன் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தலைமைப் பதவியில் இருப்பவர்களை மட்டுமின்றி, கட்சியின் அடிமட்ட தொண்டரும் எளிதில் அணுகக்கூடியவர் என்ற பெயரையும் கார்கே தன் பதவிக்காலத்தில் சம்பாதித்துள்ளார். கா ர்கே 83 வயதை கடந்தாலும், நாடு முழுதும் பயணித்து, கட்சி தொண்டர்களையும், மக்களையும் சந்தித்து வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். இது, அந்தந்த மாநில தலைவர்களுடன் அவர்களின் மொழியில் கலந்துரையாட கார்கேவுக்கு பெரிதும் உதவுகிறது. பலமிழக்கும் காங்கிரஸ் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தேர்தல் வெற்றி களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், 2022 முதல், 24 மாநில சட்டசபை தேர்தல்களில், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்., வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் உட் பட சில மாநிலங்களில் கூட்டணி அமைத்து, தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பா.ஜ., மற்றும் பிராந்திய கட்சிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது. இதுதவிர, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் செயலற்று கிடக்கிறது. இதற்கு, அம்மாநிலங்களில் நிலவும் உட்கட்சி பூசல்களே பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன. சமூக நீதி காங்., மேலிடத்துடன் ஒருங்கிணைப்பு நல்கும் கார்கே, இளைஞர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினரை ஈர்க்கும் உத்தியை மேற்கொண்டு உள்ளார். இதுதவிர ஜாதிவாரி கணக் கெ டுப்பு நடத்துவது, இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்குதல், தனியார் துறைக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை அமல்படுத்த தொடர்ந்து போ ராடி வருகிறார். இதேபோல் காங்., செயற்குழு கூட்டம் டில்லி மட்டுமின்றி, பல்வேறு நகரங்களிலும் நடத்த கார்கே வழிவகை செய்துள்ளார். காங்கிரசின் எதிர்காலத்தை அடைய, பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு எதிராக மட்டுமின்றி, 'இண்டி' கூட்டணியினரையும் எதிர்க்க வேண்டிய சூழல் உருவாகலாம். காங்., தலைவர் பதவிக்காலத்தை நிறைவு செய்ய கார்கேவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அவரது தலைமையின் கீழ், வரவிருக்கும் தேர்தல் போர்களுக்கு காங்., எப்படி மேலும் தயாராகிறது என்பதைப் பார்க்க வேண்டும். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
செப் 28, 2025 09:50

பொருளாதார நிபுணரையே டம்மி போல வைத்து நிழல் பிரதமர் மூலம் பத்து ஆட்சி நடத்தினார்கள் இருந்தார்கள். இதெயெல்லாம் ஜுஜுபி பீஸ்.


Shivakumar
செப் 28, 2025 08:46

காங்கிரசின் கடைசி முடிவுரையை கார்கே முடித்துவைப்பார். அரசியலில் தெளிவின்மை, இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் மட்டமாக பேசும் ராகுலை கண்டிக்காமல் விடுவது, பாராளுமன்றதை நடத்தவிடாமல் செய்வது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து செல்ல கட்டாயப்படுத்துவது, சீன மற்றும் பாகிஸ்தானுக்கு பாராளுமன்றத்தில் சப்போர்ட் செய்வது இதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதால் வரும் தேர்தலுக்குள் காங்கிரஸ் புதைகுழியில் சென்று தானாகவே படுத்து கொள்ளும்.


D Natarajan
செப் 28, 2025 08:35

வெளிநாட்டு வந்தேறிகள், காந்தி குடும்பம் ? இருக்கும் வரை கார்கே ஒரு டம்மி பீஸ். கான் கிரேஸ் அழியும் காலம் நெருங்கி விட்டது


shyamnats
செப் 28, 2025 08:14

பலமிழக்கும் காங்கிரஸ் கட்சியில், டம்மியான தலைவர்கள் - மன்மோகன் சிங் போல இவரும். கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்னமோ கான் கிராஸ் குடும்பம் மட்டுமே. மேலே யாரும் போக முடியது. பொம்மலாட்டத்தில் கையை காலை அசைப்பது போலத்தான் இவர்கள் நடவடிக்கை அமையும். நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராவுல் வின்சி, பிரியங்கா வாத் ரா என்று குடும்ப பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மக்கள் தான் முடிவுரை எழுத வேண்டும்.


A viswanathan
செப் 28, 2025 21:18

இந்த ஆளை யார் காங்கிரஸ் தலைவர் என்று சொன்னார்கள். இத்தாலியகாரியின் அடிமை.தலைவராக இருந்தாலும் இல்லாவிடினும் ஒன்றுதான்.நாட்டிற்கு நன்மை ஏதும் இல்லை.


சமீபத்திய செய்தி