உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nl6ery6g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 12ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.காற்றழுத்த தாழ்வு காரணமாக, வங்கக்கடலில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்திற்கு டிசம்பர் 11, 12, 13ம் தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Easu
டிச 08, 2024 01:05

இந்த வருடம் முடிந்து 2025ல் வறட்சி நிலவுவதால் கான் சாத்திய கூறுகள் அதிகம்


Sugumar Sugu
டிச 07, 2024 23:20

மத்தவங்க என்ன பண்ணுறாங்க நு பாக்குறீங்க, நீங்க என்ன பண்ண போறீங்க யோசிங்க.....


HoneyBee
டிச 07, 2024 18:16

வரட்டும் நல்லா வரட்டும். இந்த மழை அருமை ஏப்ரல் மே மாதங்களில் தெரியும்


Krishna
டிச 07, 2024 16:05

Okay... Adutha assignment Vijay eppadi thirumaavai pesalaam... Vivaatha medai


HoneyBee
டிச 07, 2024 18:18

₹200 கூட்டம் வாய்க்கு வந்ததை பேசும். அடுத்து சோசப்பு அணில் குஞ்சுகள் பதில் தரும். நல்லா பொழுது போகும்..


MARI KUMAR
டிச 07, 2024 15:28

மீண்டும் ஒரு புயலா? கனமழை, வெள்ளம், மழையா?


HoneyBee
டிச 07, 2024 18:17

அடிச்சி தூக்க போவுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை