உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை காப்பாற்ற வசதி இல்லாதவர் பல திருமணங்களை செய்து கொள்ள கூடாது: கோர்ட் அறிவுரை

மனைவியை காப்பாற்ற வசதி இல்லாதவர் பல திருமணங்களை செய்து கொள்ள கூடாது: கோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: 'மனைவியை வைத்து காப்பாற்ற பொருளாதார வசதி இல்லாதவர், பல திருமணங்களை செய்துகொள்ளக் கூடாது' என, முஸ்லிம் மத யாசகருக்கு கேரள உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரின் தால்மன்னா, 39. இவரது கணவர் கும்பாடி, 46. முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இரண்டாவதாக பெரின்தால்மன்னாவை மணந்து கொண்டார். தள்ளுபடி பார்வை மாற்றுத்திறனாளியான இவர், யாசகம் பெற்று மாதந்தோறும் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அதை வைத்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், மூன்றாவதாக ஒரு பெண்ணை மணந்து கொள்ளப் போவதாக கும்பாடி, தன் இரண்டாவது மனைவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெரின்தால்மன்னா, கணவர் கும்பாடியிடம் இருந்து மாதந்தோறும் 10,000 ரூபாய் செலவுக்காக பெற்றுத் தரக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கும்பாடி யாசகராக இருப்பதால், இரண்டாவது மனைவியின் செலவுக்காக மாதந்தோறும் 10,000 ரூபாய் வழங்க உத்தரவிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில் பெரின்தால்மன்னா மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்து நீதி பதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அந்த மதத்தின் சட்டப்படி அவர், இரண்டு, மூன்று திருமணங்களை செய்து கொள்ளலாம். அதே நேரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவியை வைத்து காப்பாற்ற முடியாத ஒருவரால், அடுத்தடுத்து திரு மணம் செய்து கொள்வதற் கு எந்த உரிமையும் இல்லை. போதிய கல்வி, விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் முஸ்லிம் சமூகத்தில் இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன. மனைவியை காப்பாற்ற போதிய வருமானம் இல்லாத ஒருவர் செய்த திருமணங்களை நீதிமன்றம் நிச்சயம் அங்கீகரிக்காது. யாசகத்தை வாழ்வா தாரமாக அங்கீகரிக்க முடியாது. யாசகம் எடுக்கும் நிலைக்கு ஒருவர் தள்ளப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசு, சமூகம் மற்றும் நீதித்துறைக்கு இருக்கிறது. ஒருவேளை யாசகம் செய்யும் நிலைக்கு ஒருவர் தள்ளப்பட்டால், அவருக்கான உணவு மற்றும் உடைகளை அரசு தான் வழங்க வேண்டும்.

யாசகம்

முஸ்லிம் மதத்தின் அடிப்படை கோட் பாடுகளை கூட புரிந்து கொள்ளாமல், மசூதி முன்பாக யாசகம் கேட்டு பிழைத்து வரும் பார்வை மாற்றுத்திறனாளி மனிதர், அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு முஸ்லிம் மதத்தின் கடமையை புரிய வைக்க வேண்டும். இரண் டாவது மனைவிக்கு செலவுக்காக மா தந்தோறும் 10,000 ரூபாய் வழங்குமாறு யாசகம் கேட் பவருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதே நேரம், யாசகரின் மனைவிகளுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவை கிடைப்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
செப் 22, 2025 19:36

முஸ்லீம் மதம், போரில் இறந்த வீரர்களின் மனைவிகள் விதவைகளாக மாறினால் ஒரு ஆண் முதல் மனைவியுடன் சேர்த்து 2-3 விதவைகளை திருமணம் செய்யலாமென்றுதான் சொல்கிறதே தவிர, இப்போ போருக்கு போகும் ஆண்களும் இல்லை, விதவைகள் கட்டாயமாக மறுமணம் செய்யவேண்டிய கட்டாயமுமில்லை. இஸ்லாமிய புனித நூலில் எவ்வளவோ நல்லது இருக்க ஏன் இம்மத ஆண்கள் பல திருமணங்களை மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கின்றனர் சாமி.


Siva Balan
செப் 21, 2025 14:06

பெண் பித்தர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மதம்.


MUTHU
செப் 21, 2025 09:24

.... தீர்ப்பு நிறைய எரிச்சலூட்டுகின்றது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2025 07:57

உலக அளவில் திருமணத்தை மீறிய உறவு என்கிற வகையில் அந்த நாட்டில் மக்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2025 07:53

ஜட்ஜையா .... இறைவனிடம் கையேந்தும் மத அடிப்படைவாதிகளுக்கு இது பொருந்தாதுதானே >>>>


VenuKopal, S
செப் 21, 2025 07:52

கோர்ட் அறிவுரை...யப்பா. என்னே ஒரு தீர்ப்பு...


Rajasekar Jayaraman
செப் 21, 2025 06:47

கொழுப்பு எடுத்து அவன் பலதாரம் மணம் செய்வான் அரசு அவனுக்கு உதவி செய்யவேண்டுமா எங்கள் வரிப்பணம் பொறம் போக்குகளுக்கு தானம் செய்ய நீதிமன்றம் தேவையா இந்த தீர்ப்பு.


அப்பாவி
செப் 21, 2025 06:43

குடும்பத்தோடு சேர்ந்து யாசித்தால் நிறைய தேறுமே...


baskkaran Kg
செப் 21, 2025 03:03

Waoq board Kerala what is doing for the deprived family


புதிய வீடியோ