உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!

அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாகிஸ்தான் நமது அண்டை நாடு; ஆனால் அண்ட முடியாத எதிரி நாடு. ஆனால், பாகிஸ்தானியரை பொறுத்தவரை இந்தியாவை பல்வேறு விதங்களில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. உயர்தர மருத்துவமனைகளோ, அதிநவீன சிகிச்சை முறைகளோ அங்கு கிடையாது. பயங்கரவாதிகளுக்கு நிதி வாரி வழங்குவதில் தான், அங்குள்ள அரசு அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானியர் பெரும்பாலும் இந்தியாவுக்கு தான் வருகின்றனர்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அட்டாரி - வாஹா சோதனைச் சாவடியை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டது. 'சார்க்' விசா சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த, பாகிஸ்தானியர் பலரும் பரிதவிப்பில் உள்ளனர்.பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்த ஒரு பாகிஸ்தானியர், தனது இரண்டு குழந்தைகளை ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து வந்தார். அவர் கூறுகையில், ''எனது 9 மற்றும் 7 வயது குழந்தைகள் இருவர் பிறவி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை வசதிகள் அளிக்க பாகிஸ்தானில் எந்த வசதியும் இல்லை. டில்லியில் உயர்தர சிகிச்சை இருப்பதால், அழைத்து வந்துள்ளேன். அவர்களின் அறுவை சிகிச்சை, அடுத்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் நலமுடன் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.ஆனால், பஹல்காம் சம்பவத்துக்குப் பின், நாங்கள் உடனடியாக பாகிஸ்தான் திரும்புமாறு கூறப்பட்டுள்ளோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. மருத்துவர்கள் நன்கு கவனிக்கின்றனர். எனது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நான், இரு நாட்டு அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்,'' என்றார்.

இந்தியா தான் தாய் மண்'

பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்து இந்தியரை மணந்த பெண் ஒருவர் நான் பாகிஸ்தான் செல்ல மாட்டேன். இந்தியா தான் எனது நாடு. என்னை இங்கு வாழ அனுமதியுங்கள் என, பிரதமர் மோடிக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாகிஸ்தான் கராச்சியை சேர்ந்தவர் சீமா ஹைதர். இவருக்கு பாகிஸ்தானில் சிந்து மகாணத்தில் பாகிஸ்தானியர் ஒருவருடன் திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளனர். அப்போது, ஆன்லைன் வாயிலாக, இந்தியரான சச்சின் மீனா என்பவருடன் காதல் ஏற்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நான்கு குழந்தைகளுடன், அவர் சட்டவிரோதமாக வந்தார். பின், சச்சின் மீனாவை திருமணம் செய்து, உத்தரபிரதேசம் கவுதம புத்தா நகரில் வசித்து வந்தார். அவரை இந்திய குடியேற்ற துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பல்வேறு சட்டச்சிக்கல்களை சமாளித்து, நொய்டா நகரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.மத்திய அரசின் விசா ரத்து உத்தரவால், பாதிக்கப்பட்டுள்ள சீமா, 'நான் பாகிஸ்தானில் பிறந்தாலும் இந்தியா தான் எனது தாய் மண். என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பாதீர். பாகிஸ்தான் சென்றால், எங்களால் நிம்மதியாக வாழ முடியாது,'' என பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்களை வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

ஹர்ஷா
ஏப் 27, 2025 20:08

அப்பாவி இந்துக்கள் உயிர் போயிற்றே திரும்ப வருமா ?


V.Mohan
ஏப் 27, 2025 14:45

ஆட்சியாளர்களை பயங்கரவாதத்திற்கு பொறுப்பாக்கி தண்டனை தரும் அதே சமயம் சாதாரண மக்களுக்கு உதவினால் எதிர்காலத்தில் பிரச்னை குறையலாம்.


சூரியா
ஏப் 27, 2025 14:32

நாம் அடுத்து, இரக்கம் காட்டாமல் விரட்டவேண்டியது, இலங்கைத் தமிழர்களை. எல்லா 420 வேலைகளிலும் கைதேர்ந்தவர்கள், அவர்கள்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 27, 2025 14:11

அவன் இரக்கமே இல்லாம ஹிந்துவை கொல்லுவான், பொத்திட்டு இருக்கணும்


K V Ramadoss
ஏப் 27, 2025 13:55

இரண்டு குழந்தைகளும் மருத்துவம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மோதி அவர்கள் இவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளித்து, மருத்துவம் முடித்து நலம் அடையும் மட்டும் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும். இதனால் மற்ற நாடுகளின் நன்மதிப்பையும் நாம் பெறலாம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 27, 2025 16:09

நன்மதிப்பை பெற்று நாக்கு வழிக்கவா....??? பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு என் தம்பியை பலி கொடுத்த எங்கள் குடும்பத்திற்கு தான் அதன் வலி தெரியும் ......இன்னும் ஒரு ஐம்பது பேரை பலி கொடுத்து....இன்னும் நிறைய நன்மதிப்பை பெறலாமா....???


Padmasridharan
ஏப் 27, 2025 13:43

கொன்றுவிட்டு வீரர்கள் என்று கொக்கரிக்கும் மதம் பிடித்த மனிதர்கள் தங்கள் நாட்டில் மருத்துவ வளர்ச்சியை ஏன் ஏற்படுத்தவில்லை. வானும், நீரும், இயற்கை வளங்கள். கல்வி, மனிதன் நினைத்தால் உயர்த்துக்கொள்ளமுடியும். இந்தியர்கள் ஆனால் என்ன பாகிஸ்தானியர்களானால் என்ன. துப்பாக்கிக்கு பதில் புத்தகத்தை பிடிக்கட்டும்


ஆரூர் ரங்
ஏப் 27, 2025 13:14

சிகிச்சை என்ற பெயரில் இங்கு வந்து ஜிஹாதி வேலைகளை கூட செய்வார்கள். சிகிச்சை வேண்டுமென்றால் ஆப்கானுக்குச் செல்லட்டும்.


பாமரன்
ஏப் 27, 2025 14:32

ரங்கிடுக்கு வரும் கோவத்துக்கு இனிமேல் மானமுள்ள ஹிந்து யாரும் துலுக்கன்க நாட்டில் அல்லது அவனுவ நடத்தும் இந்திய கம்பெனிகளில் வேலை செய்யக் கூடாது...


எஸ் எஸ்
ஏப் 27, 2025 12:48

இந்தியா மீது அவ்வளவு நன்மதிப்பு உள்ளவர்கள் பாக் அரசை எதிர்த்து உள்நாட்டில் கலகம் செய்ய வேண்டியதுதானே? அடலீஸ்ட் பாக். கில் வசிக்கும் ஹிந்துக்களை யாவது நல்ல முறையில் நடத்தலாமே?


HoneyBee
ஏப் 27, 2025 11:20

நாங்கள் மட்டும் எங்க சகோதரிகள் கணவர் குழந்தைகளை இழந்து அவதிப்பட்டு வருகிறோம். நீங்க இந்தியாவின் தயவால் நல்லா வாழ்வீர்கள். போய் அந்த தீவிரவாதிகளை பிய்த்து உதறுங்கள். அவர்களால் தான் இந்த நிலை உங்களுக்கு. நாங்கள் அமைதி விரும்புகிறோம். ஆனால் உங்க அரசியல்வாதி நேற்று கூட இங்கிலாந்தில் கை சைகைகள் கேவலமாக செய்கிறான்‌. தவறு எங்க மீது இல்லை.


தமிழ்வேள்
ஏப் 27, 2025 10:45

அப்படி இவர்களுக்கு பாரதம் மீது பற்று பாசம் இருந்தால் ஹிந்துவாக மதம் மாறி விடலாமே? காட்டுமிராண்டி மதத்தில் ஏன் இருக்க வேண்டும்? மூர்க்க மதத்தில் இருந்தால் சகலவிதமான மானிட குலத்துக்கு எதிரான குற்றங்களையும் மன உறுத்தல் இல்லாமல் சந்தோஷமாக செய்யலாம்.. குற்றத்திற்காக சொர்க்க போகமும் கிடைக்கும் என்று நம்புவதால்..எனவே முதலைகளுக்கு இரக்கம் பார்க்காமல் இருப்போம்.. மூர்க்க கும்பல் பிறவி பயங்கரவாதிகள்.. இவர்கள் சங்காத்தம் வேண்டவே வேண்டாம்.