உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் 58 சதவீதம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் 58 சதவீதம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்: ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : இந்தியாவில் கடந்த 2018ல் 20.4 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 2023ல் 58.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குளோபல் டேட்டா எனும் தரவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, குளோபல் டேட்டா எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாரம்பரிய ரொக்கம் மற்றும் வங்கி பணப்பரிமாற்றத்துக்கு மாற்றாக இ-காமர்ஸ் எனும் மாற்று கட்டண முறை வேகமாக அதிகரித்து வருகிறது. யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை பெற்று, அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் சீனா முன்னணியில் இருக்கிறது. சீனாவில் இ-காமர்ஸ் பரிவர்த்தனை கடந்த 2018ல் 53.4 சதவீதமாக இருந்த நிலையில், 2023ல் 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2018ல் இருந்து இ-காமர்ஸ் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2018ல் 20.4 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 2023ல் 58.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Sasikumar Yadhav
ஜூன் 18, 2024 12:18

வேலூர் மாவட்டம் லத்தேரி 632202 ஸ்ரீதேவி ஸ்வீட் சரவணா ஸ்வீட் ஆகிய 2 கடைகளில் கூகுள் பே போன்ற யுபிஐ பணபரிவர்த்தனை செய்ய அனுமதியில்லை . லட்சக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது மொத்தம் பணம் மட்டுமே


Ramesh Sargam
ஜூன் 18, 2024 12:07

கொத்துமல்லி, கருவேப்பிலை விற்பவர்கள் முதல், யாசகம் பெறுபவர் வரை எல்லோரும் டிஜிட்டல் பரிமாற்றத்தினால் பயன்பெறுகிறார்கள். ஆனால், லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் இந்த டிஜிட்டல் பரிமாற்றத்தை ஏற்றுகொள்ளமறுக்கிறார்கள்.


Sampath Kumar
ஜூன் 18, 2024 11:36

58 சதவிகிதம் பணப்பரிமாற்றம்? 70 சதவிகிதம் ஏமாற்றம் வாழ்க டிஜிட்டல் ஹிந்த்யா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை