உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய கொடிக்கு 21 முறை சல்யூட் செய்த பாக்., ஆதரவாளர்

தேசிய கொடிக்கு 21 முறை சல்யூட் செய்த பாக்., ஆதரவாளர்

போபால்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, தேசியக் கொடிக்கு 21 முறை 'சல்யூட்' அடித்து, 'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிட்டார்.ம.பி.,யின் போபால் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர், பைசால். இவர், கடந்த மே மாதம் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டார்.அதில் நாட்டுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அவர் முழக்கமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பைசாலை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, ம.பி., உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதி டி.கே.பாலிவால், மிஸ்ரோடு போலீஸ் ஸ்டேஷனில், இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் நான்காவது செவ்வாய் கிழமைகளில் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து, 'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிடும்படி நிபந்தனை விதித்து, பைசாலுக்கு ஜாமின் வழங்கினார்.இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அக்டோபர் மாதத்தின் நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று, மிஸ்ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு பைசால் வந்தார். அங்கு, மூவர்ணக் கொடிக்கு 21 முறை சல்யூட் அடித்த அவர், பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
அக் 23, 2024 19:49

இவனை கோஷம் போட்ட இடத்திலேயே ....மக்கள் கல்லால் அடித்து கொன்று இருக்க வேண்டும்


kannan s
அக் 23, 2024 10:08

Ulla podungo evana


பேசும் தமிழன்
அக் 23, 2024 07:50

ஏண் இங்கே இருந்து கொண்டு.... எங்கள் நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு.... எதிரி நாட்டுக்கு விசுவாசமாக இர்ருக்கும் இவனை போன்ற ஆட்களை நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்..... மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த போதே.. இங்கே இருக்க பிடிக்காதவர்கள்.. அங்கே போக வேண்டியது தானே ???


Duruvesan
அக் 23, 2024 06:29

பிடிச்ச ஊருக்கு அனுப்பி இருக்கணும்


Palanisamy Sekar
அக் 23, 2024 06:15

தேசத்துரோக சிந்தனையுள்ள இவன் போன்ற துரோகிகளை கடுமையான தண்டனை விதித்து குறைந்தபட்சம் இருபதாண்டு சிறை தண்டனையை விதிக்க வகைசெய்திடவேண்டும். இவன் போன்று பலர் இருக்கின்றார்கள். இவன் மட்டுமே சிக்கியுள்ளான். அதனால்தான் இவன்போன்றோரை உலகத்தில் பலரும் வெறுக்கின்றார்கள். வாழுகின்ற நாட்டிற்கு விசுவாசமாகவே இருக்க மாட்டார்கள். இது அவர்களின் பிறவி குணம் போல. என்ன ஜென்மங்களோ


கிஜன்
அக் 23, 2024 02:25

இந்த ஸ்வானம் .... சல்யூட் அடிக்கலேன்னு தேசியக்க்கொடி வருத்தப்பட்டுச்சா ? அப்படியே புடிச்சு அங்க கொண்டு விட்டுவிட்டு வரவேண்டியது தானே ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை