மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1
பனசங்கரி : வேலைக்குச் சேர்ந்த அன்றே, முதலாளியின் நான்கு வயது மகளை கடத்திய, வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.பெங்களூரு, பனசங்கரி காவேரிபுராவில் வசிப்பவர் சபியுல்லா, 35. இவருக்கு 2015ல் திருமணம் நடந்தது. நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறில் சபியுல்லாவை அவரது மனைவி பிரிந்தார். கடந்த 2020ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதன்பின்னர் மகளை, சபியுல்லா வளர்த்து வருகிறார். காவேரிபுராவில் பர்னிச்சர் கடை நடத்துகிறார்.கடந்த மாதம் 28ம் தேதி காலை வசீம், 26, என்பவர், சபியுல்லாவின் பர்னிச்சர் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அன்று மதியம் கடை முன் விளையாடிக் கொண்டிருந்த, சபியுல்லாவின் மகளிடம் சாக்லெட் தருவதாகக் கூறி, கடத்திச் சென்றுவிட்டார். மகள் காணாமல் போனதால், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை, சபியுல்லா ஆய்வு செய்தார். மகளை, வசீம் கடத்தியது தெரிந்தது. பனசங்கரி போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை தனது தாயுடன், ராம்நகர் கனகபுராவில் இருப்பது தெரியவந்தது. அங்கு சபியுல்லா சென்றார். ஆனால் முன்னாள் மனைவியும், குழந்தையும் இல்லை. ஒரு லட்சம் ரூபாயும், திருமணம் செய்வதாக ஆசைகாட்டியும், வசீம் மூலம் குழந்தையை கடத்தி இருப்பதாக, முன்னாள் மனைவி மீது சபியுல்லா குற்றம்சாட்டி உள்ளார். தலைமறைவாக உள்ள வசீம், சபியுல்லாவின் முன்னாள் மனைவியை போலீசார் தேடுகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago | 1