உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்காஜியில் ஆம் ஆத்மி தேர்தல் அலுவலகம் திறப்பு

கல்காஜியில் ஆம் ஆத்மி தேர்தல் அலுவலகம் திறப்பு

கல்காஜி:தான் போட்டியிடும் கல்காஜி சட்டசபை தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை முதல்வர் ஆதிஷி சிங் நேற்று திறந்து வைத்தார்.தொகுதியில் மக்களுடன் உரையாற்றிய அவர், ஆம் ஆத்மியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார். தேர்தல் அலுவலகத்தில் நடந்த பூஜையிலும் அவர் பங்கேற்றார்.இதுகுறித்து 'எக்ஸ்' பக்கத்தில் படத்தை பகிர்ந்துள்ள அவர் வெளியிட்டுள்ள பதிவு:இன்று (நேற்று) என் குடும்பத்தினருடன் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தேன்.கல்காஜி மக்கள் என்னை தங்கள் மகளாகக் கருதுகின்றனர். அவர்களின் அன்பும் ஆதரவும் என் உண்மையான பலம். மக்களின் இந்த அன்பு மற்றும் மா கல்காவின் ஆசீர்வாதத்துடன், ஆம் ஆத்மி மீண்டும் கல்காஜியை வெல்லும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை