உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆம்ஆத்மி வெற்றி: பெரிய சக்தியாக மாறுவோம்: கெஜ்ரிவால் நம்பிக்கை

நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆம்ஆத்மி வெற்றி: பெரிய சக்தியாக மாறுவோம்: கெஜ்ரிவால் நம்பிக்கை

புதுடில்லி: டில்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. முன்னதாக, 'பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி கட்சி பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் பெரிய சக்தியாக மாறுவோம்' என நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதத்தின் போது கெஜ்ரிவால் பேசுகையில் தெரிவித்தார்.டில்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு ஆதரவாக 54 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். மொத்தம் உள்ள 70 எம்.எல்.ஏ.,க்களில் 54 பேர் ஆதரவாக ஓட்டளித்ததால் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. சட்டசபைக்கு வந்திருந்த எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் மட்டும் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஓட்டளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ucgzjet&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மிகப்பெரிய சவால்

முன்னதாக, நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதத்தின் போது கெஜ்ரிவால் பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்றாலும், 2029ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் மூலம் பா.ஜ., இல்லாத தேசத்தை ஆம் ஆத்மி நிச்சயம் உருவாக்கும். பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால் தான் அனைத்து தரப்பிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நாங்கள் பெரிய சக்தியாக மாறுவோம். நீங்கள் என்னை கைது செய்யலாம் ஆனால் எனது நோக்கத்தையும், போராட்டத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. சட்டசபையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை வேட்டையாட பா.ஜ., முயற்சிப்பதால் இந்த நம்பிக்கைத் தீர்மானம் தேவைப்பட்டது. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

ஓட்டெடுப்பிற்கு பின் கெஜ்ரிவால் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ., கூட எதிராக ஓட்டளிக்கவில்லை. 2 எம்.எல்.ஏ.,க்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 3 எம்.எல்.ஏ.,க்கள் சொந்த பணிக்காக சென்றுள்ளனர். 2 எம்.எல்.ஏ.,க்கள் சிறையில் உள்ளனர் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Indhuindian
பிப் 17, 2024 20:22

இது போதாது சட்டசபியில் கெஜ்ரிவாலுக்கு அவர் இஷ்டப்படி சௌகர்யப்படி ஊஷல் செய்ய முஷு அதிகாரத்தை வஷங்க வேண்டும்


Apposthalan samlin
பிப் 17, 2024 16:39

அடுத்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி அரியானாவில் ஆட்சி அமைக்கும்


குமரி குருவி
பிப் 17, 2024 15:59

ஜெயில் வா..வா..என அழைப்பது புரியவில்லையா..


Sankar Ramu
பிப் 17, 2024 15:47

சார் நீங்க திமுக அளவுக்கு திருட முடியாது ????


Duruvesan
பிப் 17, 2024 15:39

ஆக evm மூலம் மட்டுமே பிஜேபி ஜெயிக்கும் என விடியல் கூவல். மேலும் டெல்லி முதல்வர் ஆக வெற்றி பெற்ற இண்டி கூட்டணி தலீவர் கெஜ்ரி வாழ்க என கடிதம் எழுதுவார்


PREM KUMAR K R
பிப் 17, 2024 15:32

Kejriwal is the happiest man in his political circle as no one voted against him which only he wanted to test and tabled a confidence motion today. Hope he may now even go to the ED office also and wont bother even if he was arrested by officials.


R.MURALIKRISHNAN
பிப் 17, 2024 15:25

2029 ல் திமுக கட்சி மாதிரி மிக பெரிய ஊழல் கட்சியாக மாறும் என்பதே சரி


Amar Akbar Antony
பிப் 17, 2024 15:23

இது ஒரு முன் ஜாமின் போல இனி ஆறு மாத காலத்திற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரமுடியாது. ஒரு வேலை கைதாகி திஹாருக்கு சென்றாலும் ஆறு மாதம் ஓட்டலாம்னு முடிவு. மத்திய அரசு மீண்டும் தேர்தலில் நானூறு பெற்றால், "ஆம் ஆத் மீ" எல்லாம் திஹாரில் காணலாம்.


தமிழ் மைந்தன்
பிப் 17, 2024 15:20

இதை யாரும் கேட்கவில்லையே ஓ….ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டால் எதிர்கொள்ள ஒத்திகை


S ANBUSELVAN
பிப் 17, 2024 15:14

பாஜக காரன் எவனுமே குற்றவாளி இல்லை எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றவாளிகள் இதுதான் பாஜக திருட்டுக்கும்பல் டெக்னிக்


மேலும் செய்திகள்