உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவருக்கு கண்டம் என மிரட்டி பெண்ணிடம் தங்க நகை அபேஸ்

கணவருக்கு கண்டம் என மிரட்டி பெண்ணிடம் தங்க நகை அபேஸ்

கொத்தனுார், : கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக, பெண்ணை பூஜை செய்ய வைத்து தங்க நகையுடன் தப்பிய போலி சாமியாரை தேடுகின்றனர்.பெங்களூரு, கொத்தனுாரின், ஜனதா காலனியில் வசிக்கும் 25 வயது இளம்பெண், நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே நின்றிருந்தபோது, சாமியார் போன்று வந்த நபர் ஒருவர், 'உங்கள் கணவருக்கு கண்டம் உள்ளது. இதை போக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கணவர் இறந்துவிடுவார்' என மிரட்டினார்.இதை நம்பிய பெண், பூஜை செய்ய சம்மதித்தார். அந்நபரும் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். சிறிய பானையில் மஞ்சள், குங்குமம், அரிசியை போட்டார். பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி, பானைக்குள் போடும்படி அந்நபர் கூறினார். பெண்ணும் காதில் அணிந்திருந்த கம்மலை கழற்றி வைத்தார்.அதன்பின் பானையை மூடி, கயிறு கட்டிய நபர், 'பூஜை முடிந்துவிட்டது. உங்கள் கணவர் வந்த பின், பானையை திறந்து பாருங்கள். கண்டம் விலகும்' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.பெண்ணின் கணவர் பணி முடிந்து, இரவு வீடு திரும்பிய பின், அப்பெண் பானையை திறந்து பார்த்தபோது, கம்மலை காணவில்லை. அப்போது தான், ஏமாந்தது பெண்ணுக்கு தெரிந்தது.கொத்தனுார் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தம்பதி புகார் அளித்தனர். போலீசாரும் விசாரிக்கின்றனர். போலி சாமியாரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை