உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபுதாபி இளவரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

அபுதாபி இளவரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

புதுடில்லி : அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசருக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் யு.ஏ.இ.,அரசின் அமைச்சர்களும் உடன் வந்துள்ளனர். டில்லி விமானநிலையத்தில் வந்திறங்கிய அபுதாபி இளவரசரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் வரவேற்றார். மேலும் இது குறித்து எக்ஸ் வலை தளத்தில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளதாவது: அபுதாபி இளவரசர் , முதல் முறையாக இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரு நாடுகளிடையே வரலாற்று உறவின் ஒரு மைல்கல் என பதிவிட்டு உள்ளார். எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அபுதாபி இளவரசர் பிரதமர் மோடியை நாளை (திங்கட்கிழமை ) சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து மும்பை செல்லும் இளவரசர் அங்கு தொழில் துறையினரை சந்தித்து பேச உள்ளார். 2022-23ல் அன்னிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் நான்கு முதலீட்டாளர்களில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளது.மேலும் கடந்த ஜனவரி மாதத்தில், ராஜஸ்தானில் இந்தியா-யுஏஇ இருதரப்பினரின் முதல் இராணுவப் பயிற்சியான 'பாலைவன சூறாவளி' நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

God yes Godyes
செப் 09, 2024 11:41

அரபு நாடுகளை விட பாகிஸ்தான் லுங்கிகள் பெரிய கில்லாடிகள். அதனால் சைடு வாங்கி இந்தியாவை ஏமாற்ற வருகிறார்கள்


God yes Godyes
செப் 09, 2024 11:37

முதலீடு செய்ய ஐக்கிய அமீரகத்திற்கு இந்தியாதான் கிடைத்ததா. ஏன் எனில் இந்தியாவில் தான் அவர்களது இனம் வாழ்கிறது.இப்படி இந்தியாவை தவிர அவர்கள் சிறு பான்மையினர் என்ற பெயரில் வேறெந்த நாட்டிலும் வசிக்கவில்லை.


God yes Godyes
செப் 09, 2024 11:18

இந்திய சிறு பான்மைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்கள் துட்டு துக்காணி எல்லாம் அவர்கள் கைகளுக்கு ஒழுங்கா கிடைக்கிறதா என்பதை பார்க்க வந்த பெரிய .... இந்தியா வரவேற்பது ஜணப்பன் வீட்டு கோழி வலையில் மாட்ன மாதிரி.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 08, 2024 22:26

அரபு நாடுகள் பாகிஸ்தானில் முதலீடு செய்யத் தயங்குகின்றன .... ஐக்கிய அமீரகம் இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு பாகிஸ்தானில் முதலீடு செய்வதாக இருந்தது ..... பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டது .... அவர்களே உணர்ந்துள்ளனர் மதம் வேறு ..... லாபம் வேறு என்று ..... இந்தியா மூர்க்கத்தைப் பிரித்தாள்கிறது என்று இங்கே இருக்கும் லுங்கிபாய்ஸ் சிறிது காலம் புலம்பிக்கொண்டிருக்கலாம் .... அல்லது முடிந்தால் ஹமாஸ் சென்று இஸ்ரேலுக்கு எதிராகப்போராடலாம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை