உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது, சாதாரண பிரிவுகளின் கீழ் அல்லாமல், இனி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது குறித்து ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த, சாகின் மாலிக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு : ஒருவர் மீது ஆசிட் வீசுவது மற்றும் ஆசிட்டை குடிக்க வைப்பது அவரது உயிருக்கே தீங்கு விளைவிக்கும் செயல். இதனை போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது. கொலை முயற்சி வழக்காகவே பதிவு செய்யப்பட வேண்டும். சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தால், அது வழக்கின் தீவிரத்தை குறைப்பதாக இருக்கும். ஆசிட் வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போலீசார் மற்றும் கீழ் கோர்ட்டுகள் இத்தகைய குற்றங்களை மிகக் கடுமையாக கருதி, சட்டப்படி தக்க பிரிவுகளை சேர்க்க வேண்டும். ஆசிட் வீச்சு என்பது ஒருவரின் வாழ்க்கையையே அழிக்கும் குற்றம். எனவே குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி, அவர்கள் மீது கடுமையான சட்டம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். இதுவரை ஆசிட் வீசுபவர்கள் மீது 'சாதாரண காயம் விளைவித்தல்' பிரிவின் கீழ் வழக்கு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முக்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
டிச 12, 2025 12:34

வெறும் உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது. அப்படிப்பட்ட வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, அதாவது குற்றம் புரிந்தவர்களுக்கு ஜாமீன் அள்ளிக் கொடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனே கிடைக்கவேண்டும். அப்படி செய்தால் உத்தரவுக்கு ஒரு அர்த்தம், மரியாதை.


Keshavan.J
டிச 12, 2025 09:21

கொலை முயற்சி வழக்கு அல்ல. கொலை வழக்கு போட வேண்டும்


Kasimani Baskaran
டிச 12, 2025 06:00

இது வரை ஆசிட் வீசினார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை