உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: தேர்வெழுத வந்தபோது பரிதாபம்

கர்நாடகாவில் 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: தேர்வெழுத வந்தபோது பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடினார். அதில் ஒரு மாணவி ஆபத்தான நிலையில் உள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் தற்போது 2ம் பியூசி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இன்று (மார்ச் 4) தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த தேர்வு நடைபெற இருந்தது. தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த அபின் என்ற நபர், திடீரென மாணவிகள் மீது தான் கொண்டுவந்த ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடினார். இதில் துடிதுடித்த 3 மாணவிகளை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய அபினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். எதற்காக ஆசிட் வீசினார் என்ற தகவல் வெளிவரவில்லை. மாணவிகள் மீது ஆசிட் வீசிய சம்பவத்தால் அப்பகுதி பதற்றமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை